திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம்
சென்னை: யார் அந்த ஜனநாயகன் "லீக் மாஸ்டர்'? திமுக-தவெக-பாஜக இடையே வெடித்துள்ள அரசியல் புயல் மிகப்பெரிய பரபரப்பை அரசியல் களத்தில் தற்போது ஏற்படுத்தி உள்ளது.. இதனால் 'ஜனநாயகன்' படம் கசிவு விவகாரம் உச்சக்கட்டத்துக்கு தீவிரம் அடைந்துள்ளது.. இந்த காரியத்தை செய்தவர்கள் யார்? இதனால் அரசியல் லாபம் அடைபவர்கள் யார் என்ற விவாதமும் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பி உள்ளது. அதை பற்றி இங்கே நாம் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து திமுக தரப்பில் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தவெக - திமுக
குறிப்பாக தவெகவின் கொள்கை பிரகடனம் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் உரைகள், திமுகவின் நீண்டகால அரசியல் சித்தாந்தங்களுக்குப் போட்டியாக அல்லது அவற்றைச் சிதைக்கும் வகையில் இருப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தவெக முன்னெடுக்கும் "மதச்சார்பற்ற சமூக நீதி" என்ற முழக்கம், உண்மையில் திமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்கான ஒரு தந்திரம் என்றும், இதன் பின்னணியில் திராவிட அரசியலுக்கு எதிரான சக்திகளின் தூண்டுதல் இருக்கலாம் என்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் விவாதித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, தவெகவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்கப்படுவதையும், அதே சமயம் மற்ற எதிர்க்கட்சிகள் அல்லது ஒன்றிய அரசின் மீதான மென்மையான போக்கையும் திமுகவினர் சுட்டிக்காட்டியபடி உள்ளனர்..
ஜனநாயகன் பட லீக் விவகாரம்
இந்நிலையில்தான் ஜனநாயகன் படம் இணையதளம் தொடர்பான விவகாரத்தில், தவெக தரப்பு திமுக மீது நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
தவெகவின் உட்கட்சி விவகாரங்கள் அல்லது அவர்களது ரகசியத் திட்டங்கள் கசியவிடப்பட்டதன் பின்னணியில் ஆளுங்கட்சியான திமுகவின் சதி இருப்பதாக அக்கட்சியினர் கருதுகிறார்களாம். குறிப்பாக, தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் திமுக, அக்கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
திமுக மறுப்பு
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை திமுகவினர் மறுக்கிறார்கள்.. தவெகவின் இந்த வாதம் ஆதாரமற்றது என்றும், தங்கள் கட்சியின் தோல்விகளை மறைக்கப் பழிபோடும் அரசியல் செய்யப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்,.
ஒரு புதிய கட்சி தனது உள்விவகாரங்களைப் பாதுகாப்பதில் தோல்வியுற்றதற்கு ஆளுங்கட்சியைக் குறை சொல்வது ஏற்புடையதல்ல என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த ஜனநாயகன் விவகாரத்தில் திமுக மீது தவெக பழி போட்டுக் கொண்டிருக்க, படத்தை கசிய விட்டதே தவெக தரப்புதான் என்று தமிழக பாஜக ஒரே போடாக போட்டுள்ளது.
பாஜக வினோஜ் செல்வம்
'ஜனநாயகன்' வீடியோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வினோஜ் செல்வம், இதில் ஒரு நுணுக்கமான அரசியல் திரைக்கதை ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கிறார். பொதுவாக நடிகர்கள் திரையில் தொடர்ந்து தோன்றாவிட்டால் மக்கள் அவர்களை மறந்துவிடுவார்கள் என்பதால், மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்த தவெகவே இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்று வினோஜ் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா என்பவரே திட்டமிட்டு இந்த ஜனநாயகன் காட்சிகளை கசிய விட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
திமுகவை விடவும் தவெகவினர் மிகத் தீவிரமாகத் திரைக்கதை எழுதி, மக்கள் மத்தியில் ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் தேட முயல்வதாகவும், தந்திரங்களில் தவெகவினர் திமுகவிற்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றும் வினோஜ் செல்வம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, திமுக மீது தவெக குற்றஞ்சாட்ட, தவெக மீது தமிழக பாஜக குற்றஞ்சாட்ட.. உண்மையிலேயே ஜனநாயகன் படத்தை கசிய விட்டது யார்????












Click it and Unblock the Notifications