Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாம்! புத்தகக் கண்காட்சி நிறுவி மாற்றியோசித்த கிராமத் தலைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை அறிவுத் திருவிழாவாக கொண்டாடும் வகையில் 9 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிறுவியுள்ளார் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர்.

Recommended Video

    புத்தகக் கண்காட்சி...கருணாநிதி பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாம்!

    பொதுவாக இது போன்ற விழாக்களின் போது அண்டா, குண்டா, இஸ்திரி பெட்டிகள் வழங்குவது, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவது என்பது கட்சியினர் செய்யும் வழக்கமான காரியமாகும்.

    ஆனால் அது போன்றில்லாமல் மனிதனின் சிந்தனைத் திறனை தூண்டுவதற்கு பெரிதும் பயன்படும் புத்தகங்களை கொண்டு கண்காட்சி அமைத்து மாற்றியோசித்துள்ளார் அந்த நிர்வாகி.

     கருணாநிதி பிறந்தநாள்

    கருணாநிதி பிறந்தநாள்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை கடந்த மூன்று நாட்களாக திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியும் தங்கள் அன்பை ஒவ்வொரு நிர்வாகியும் வெளிப்படுத்துகிறார்கள். இதனிடையே சென்னை மதுரவாயல் அருகே உள்ள அயப்பாக்கத்தில், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 9 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அமைத்துள்ளார் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீரமணி.

     புத்தக வெளியீட்டாளர்கள்

    புத்தக வெளியீட்டாளர்கள்

    புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பக நிறுவனத்தார்களுடன் பேசி அவர் இந்த புத்தகக் கண்காட்சியை அமைத்திருக்கிறார். அதில் 50-க்கும் மேற்பட்ட அரங்ககுள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண சிறிய ஊராட்சியில் இது போன்று புத்தகக் கண்காட்சி நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    டி.ஆர்.பாலு வியப்பு

    டி.ஆர்.பாலு வியப்பு

    புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார். கருணாநிதியின் எழுத்தில் உருவான புத்தகங்கள் மட்டுமின்றி இதர வகையான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    முதலில் தயக்கம்

    முதலில் தயக்கம்

    அயப்பாக்கம் ஊராட்சிப் பகுதி என்பதால், அங்கு புத்தக ஸ்டால்கள் போட்டால் விற்பனை சரியாக இருக்குமா என ஆரம்பத்தில் புத்தக பதிப்பகத்தார்கள் சிலர் தயங்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் அங்கு மக்கள் மத்தியில் கருணாநிதி பிறந்தநாள் புத்தகக் கண்காட்சிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+