முதல்வர் அறையில் இப்படி செய்யலாமா? அமைச்சர்கள் செய்தது அநாகரீகத்தின் உச்சம்! திமுக பரந்தாமன் சுளீர்
சென்னை: இடைத்தேர்தல் வெற்றியை முதல்வர் விஜய் அறையில் அமைச்சர்கள் கொண்டாடி ஒரு செய்கை செய்தது அநாகரீகத்தின் உச்சம் என திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்கும் வலிமையானது என்பதை இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியினுடைய வாக்காளர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் தவெக அரசினுடைய குதிரை பேரத்தால் இந்த தேர்தல் திணிக்கப்பட்டது என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
ஸ்டாலின் சொன்னது போல்!
ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் இவற்றைய எல்லாம் வைத்து இன்றைக்கு இடைத்தேர்தலில் தவெக வென்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல அவர்கள் வெற்றி பெற்றாலும் ஜனநாயகத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகம் களத்தில் வெற்றி வாய்ப்பு இழந்திருந்தாலும் அரசியல் ஜனநாயகத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்ற ஸ்டாலினின் ஒரு வரியை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
மதுராந்தகத்தில் உழைப்பு
எனக்காக மதுராந்தகத்தில் உழைத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக வலிமை
இந்த தேர்தல் என்பது தமிழ்நாட்டில் திமுகவுடைய வலிமையை உணர்த்தி இருக்கக் கூடிய தேர்தல். மக்களுக்காக என்றைக்கும் களத்தில்
நிற்கக்கூடிய இயக்கம் திமுக என்று உணர்த்தி இருக்கக் கூடிய ஒரு தேர்தல்.
இந்த தேர்தலில் வாக்களித்த மதுராந்தகம் தொகுதி மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் வேட்பாளர் என்கின்ற
அடிப்படையில் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகார பலம்
ஆட்சி பலம், அதிகார பலத்தை வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, இன்றைக்கு திமுகவினுடைய வாக்கு வங்கி மிக வலிமையாக இருக்கிறது என்பதை காட்டி இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசுறாரு, "கூட்டணி கட்சியின் 15 சதவீத வாக்குகளை வைத்துதான் திமுக வென்றது" என பேசியுள்ளார். ஆனா இன்றைக்கு மதுராந்தகத்தில் பெற்றிருக்கக் கூடிய வாக்கு சதவீத்தை பார்க்கும்போது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வாக்கு
வங்கி என்பதை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது.
எனவே தவெகவுக்கு இன்றைக்கு கிடைத்திருக்கக் கூடிய வாக்கே கூட்டணி கட்சி வைத்துதான் என்பதையும் ஆதவ் உணர்ந்து பேச வேண்டும்.
முதல்வர்
ஒரு முதல்வராக பொறுப்பேற்றவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்ட அரசினுடைய தலைமை இடமான தலைமை செயலத்துக்கு சென்று
முதல்வருடைய அறையில் போய் தேர்தல் வெற்றியை அவர் கொண்டாடிய விதையும் காட்டிய செய்கையும் அரசியல் அறமற்ற
தன்மை, ஒரு தவறான அரசியலை தமிழ்நாட்டுக்கு இவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.
வெற்றி தோல்வி
தேர்தல் களத்தில் வெற்றி தோல்வி என்பது இயற்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை போல வெற்றியை கண்ட இயக்கமும் இல்ல. திமுகவை போல வெற்றி வாய்ப்பை இழந்த இயக்கமும் கிடையாது. ஆனால் எல்லா நிலையிலும் ஒரே நிலையில் இருந்து அரசியல் செய்த இயக்கம். ஆனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் முதலமைச்சருடைய அறைக்கு சென்று
அவரோடு சேர்ந்து சில அமைச்சர் பெருமக்கள் எல்லாம் செய்கின்ற செய்கை என்பது இது அநாகரீகத்தின உச்சம். இவ்வாறு பரந்தாமன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
