“ஸ்டாலின் அங்கிள்” என பேசிய விஜய் மீது வழக்கு.. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
சென்னை: தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் இன்று (திமுக வர்த்தக அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜய்க்கு எதிராக தீர்மானம்
மேலும், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சியின் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என விளித்து, விஜய் பேசியதற்கு திமுகவினரும், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
மரண அடி கிடைக்கும்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில வர்த்தகர் அணியின் செயலாளர் காசி முத்து மாணிக்கம், "மதுரையில் நடைபெற்ற தவெக மாநாடு சினிமா படப்பிடிப்பு போல் நடந்துள்ளது. தமிழக முதல்வரை, தவெக தலைவர் விஜய் மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது.
இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், கட்சியில் மூத்த நிர்வாகிகள் யாரும் இன்றி கட்சி ஆரம்பித்த உடனே முதல்வராக வேண்டும் என கனவில் இருக்கும் விஜய்க்கு வருகிற தேர்தலில் பொதுமக்கள் மரண அடி கொடுப்பார்கள். அதன் பிறகு நாட்டில் எந்த நடிகரும் முதல்வர் கனவுடன் அரசியலுக்கு வர மாட்டார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் பேசியது
தவெக மாநாட்டில் விஜய் பேசுகையில், "திமுக அரசு பாஜக கூட்டணியுடன் உள்ளுக்குள் உறவு ஒன்றை வைத்து கொண்டு வெளியே எதிர்ப்பது போல ஒரு நாடகம் ஒன்றை ஆடிக்கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் விடுவது.. ஆளும் கட்சியாக இருந்தால் குடையை பிடித்துக்கொண்டு வாங்க மோடி என்று கும்பிடு போடுவது. இது மட்டுமா? ரெய்டு என்று ஒன்று வந்துவிட்டால் இதுவரை போகாத ஒரு மீட்டிங்குக்கு போவது.
ரெய்டு வந்தவுடன் வேகமாக டெல்லிக்கு செல்வது அங்கு சென்று அங்கு ரகசியமாக ஒரு மீட்டிங் நடத்துவது. மக்களே நீங்கள் நல்லா நோட் பண்ணுங்க.. அந்த மீட்டிங்கிற்கு பிறகு இந்த சர்ச்சை அப்படியே காணாமல் போய்விட்டது. ஸ்டாலின் அங்கிள் இஸ் வெரி ராங் அங்கிள். தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்த்துவிட்டு நாம் எப்படி சும்மாக இருக்க முடியும்? ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும்.. அங்கிள் அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
நீங்கள் நடத்துகிற இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்க மை டியர் ஸ்டாலின் அங்கிள் அவர்களே..டாஸ்மாக்கில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடப்பதாக சொல்கிறார்கள். அதில் மட்டுமா? ஊழல் நடக்கிறது? உலகத்தில் மிஸ்டர் க்ளீன் என்பதை உங்களுக்கு உங்களுடன் இருப்பவர்களுக்கு தான் கொடுக்கணும் அங்கிள்.
இதனை பார்த்து வாயில்லாத ஊர் கூட பார்த்து சிரிக்கிறது. பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டீர்கள் என்றால் போதுமா அங்கிள்? அப்படியே அதனை மூடி மறைத்துவிடலாம் என நினைக்கிறீர்களா? பெண்கள் படிக்கச் செல்லும் இடத்தில் பாதுகாப்பு கூட இல்லை என்று சொல்கிறார்கள். அந்த கதறல் சத்தம் உங்களுடைய காதில் கேட்கிறதா? ஸ்டாலின் அங்கிள் இதில் வேற உங்களை அப்பா என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்... வாட் இஸ் திஸ் அங்கிள் இஸ் வெரி.. வெரி ராங் அங்கிள்.
பெண்களை மட்டுமா? அரசியல் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்... அரசு ஊழியர்கள்.. ஆசிரியர்கள்.. விவசாயிகள் பரந்தூரில் பாதிப்பு வராது என்று சொல்லி ஏமாற்றுகிறீர்கள்.. மீனவர்களை ஏமாற்றுகிறீர்கள்.. போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிப்போம் என ஏமாற்றுகிறீர்கள்.. ஐயோ வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என விஜய் பேசி இருந்தார்.
-
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications