திமுக அமைச்சராவார் டிஆர்பி ராஜா.. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவரொட்டியால் பரபரப்பு
சென்னை: மன்னார்குடி திமுக எம்எல்ஏவும் டிஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா தமிழக அமைச்சராவார் என வாழ்த்தி வாக்குகள் எண்ணுவதற்கு முன்பே ஆங்காங்கே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் சார்பில் 5 முனை போட்டி நிலவியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு ஏகோபித்தமாக இருந்ததை அடுத்து சட்டசபைத் தேர்தல் வெற்றியை நோக்கியே பயணித்தது.

திமுக
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே திமுக விடியலை நோக்கி தமிழகம், ஸ்டாலின்தான் வாராரு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு கொடுத்ததாக திமுகவினர் சொல்கிறார்கள்.

ஆட்சி
மேலும் அந்தக் கூட்டங்களில் பலர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனுக்களையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலையோ அல்லது நள்ளிரவோ அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தமிழக அமைச்சர்
இந்த நிலையில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜா தமிழகத்தின் அமைச்சராவார் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் மண்ணை சட்டசபை உறுப்பினராக 2011 இல் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் மன்னார்குடி உறுப்பினராகவும் திமுக அயலக அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

போஸ்டரில் ஏன்?
2021 ஆம் ஆண்டு அதே மண்ணை சட்டசபை உறுப்பினர் திமுக அயலக அணித் தலைவர் மாண்புமிகு திமுக அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இன்னமும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளே வெளியாகவில்லை, அதற்குள்ளாக இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications