அராஜகம்.. எஸ்.ஐ மண்டையை பிளந்த திமுக பிரமுகர்.. ரத்தம் சொட்ட சொட்ட ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து.. ஷாக்
சப்-இன்ஸ்பெக்டரின் மண்டையை பிளந்த திமுக பிரமுகர் கைதானார்
சென்னை: குடிபோதையில் திமுக பிரமுகர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து, போலீஸ்காரரின் மண்டையை உடைத்த சம்பவம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில், சில இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.. இது கடந்த 4ம் தேதி நைட் நடந்துள்ளது.. அப்போது, அந்த வழியாக டியூட்டி முடித்து விட்டு, ஆதம்பாக்கம் எஸ்ஐ மோகன்தாஸ் டூவீலரில் சென்றுள்ளார்.. அவருக்கு வயது 54.

நடுரோட்டிலேயே குடித்து கொண்டிருந்த இளைஞர்கள் மோகன்தாஸ் வண்டிக்கு வழியும் விடவில்லை.. ஃபுல் போதையில் அவர்களுக்குள் அட்டகாசம் செய்தபடியே இருந்தனர்.. இதனால் மோகன்ஸ் ஹாரன் அடித்தார்.. அப்போதும் அந்த இளைஞர்கள் நகரவில்லை
இவர் தொடர்ந்து ஹாரன் அடித்ததால், எரிச்சல் அடைந்த அந்த நபர்கள், கையில் இருந்த பீர் பாட்டிலால் மோகன்தாஸின் மண்டையை உடைத்து விட்டனர்.. பிறகு அந்த பைக்கின் சாவியை எடுத்து கொண்டனர்.. மோகன்தாஸின் செல்போனையும் பிடுங்கி கொண்டனர். ரத்தம் கொட்ட கொட்ட மோகன்தாஸ் வலியால் துடித்தார்.. பிறகு, பக்கத்தில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிக்சைக்காக அவராகவே சென்றார்.
தலை, புருவம் பகுதியில் மொத்தம் 13 தையல் போடப்பட்டது.. பிறகு அங்கிருந்து கிளம்பி பரங்கிமலை ஸ்டேஷனில் இதை பற்றி புகார் தந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வந்தனர்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, வினோத் என்பவரை கைது செய்தனர்.. இவர்தான் அந்த இளைஞர்கள் கூட்டத்தில் முக்கியமான நபர்.. ஆலந்தூரை சேர்ந்த 162 வட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் என்று சொல்லப்படுகிறது.. 30 வயதாகிறது. வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. அவருடன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்குமாரையும் கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரரின் மண்டையை திமுக பிரமுகர் பிளந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.. "வன்முறை கட்சி என்று பிற கட்சிகளை சொல்லும் திமுக, இதற்கு என்ன சொல்ல போகிறது? "ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ, உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பிய திமுகவே இதையெல்லாம் பார்த்து கொள்ளட்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications