சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படிக்காதவர்கள் 'டூ' புரஃபஷனல் வரை.. திமுகவுக்கு 'ஏகோபித்த' ஆதரவு - 'இந்தியா டுடே' எக்சிட் போல்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், ஒவ்வொரு கட்சிக்கும் படித்தவர்கள், படிக்காதவர்கள் ஆகியோரின் வாக்குகள் சதவிகிதம் குறித்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும்.

திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என்று ஐந்து முனைத் தேர்தல் களத்தை தமிழக சட்டசபைத் தேர்தல் சந்திக்கிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

49% ஆண்கள்.. 47% பெண்கள்.. 'எகிறும்' திமுக ஆதரவு - 'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு49% ஆண்கள்.. 47% பெண்கள்.. 'எகிறும்' திமுக ஆதரவு - 'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு

 திமுக லீடிங்

திமுக லீடிங்

வெயில், கொரோனா என்று எதற்கும் அஞ்சாமல் வாக்குகளை வேட்டையாடிய கட்சிகள், அன்றைய மே 2 என்ற தினத்துக்காக தான் காத்திருக்கின்றன. இந்த நிலையில், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைமை அதிருப்தி

தலைமை அதிருப்தி

கொங்கு மண்டலம், தென் மண்டலம் என்று அதிமுக கோட்டைகளை இம்முறை திமுக தகர்க்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் பல்வேறு முக்கிய 'தலை'களின் முடிவுகள் வருத்தத்திற்குரிய நிலையில் உள்ளது. இதனால் அதிமுக தலைமையும் அதிருப்தியில் உள்ளது.

 அதிலும் திமுக டாப்

அதிலும் திமுக டாப்

இந்த நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், படித்தவர்கள், படிக்காதவர்களின் வாக்கு சதவிகித முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், திமுக கூட்டணிக்கு கல்வி கற்காதோரில் 48 சதவிகிதத்தினரும், 12வது வரை படித்தவர்கள் 43 சதவிகிதத்தினரும், படித்தவர்கள் 42 சதவிகிதத்தினரும், புரஃபொஷனல்-ல் 40 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 கமல் என்னாச்சு?

கமல் என்னாச்சு?

அதேபோல், அதிமுக கூட்டணிக்கு கல்வி கற்காதோரில் 39 சதவிகிதத்தினரும், 12வது வரை படித்தவர்கள் 30 சதவிகிதத்தினரும், படித்தவர்கள் 33 சதவிகிதத்தினரும், புரஃபொஷனல்-ல் 33 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமமுக கூட்டணிக்கு கல்வி கற்காதோரில் 3 சதவிகிதத்தினரும், 12வது வரை படித்தவர்கள் 4 சதவிகிதத்தினரும், படித்தவர்கள் 3 சதவிகிதத்தினரும், புரஃபொஷனல்-ல் 4 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு கல்வி கற்காதோரில் 4 சதவிகிதத்தினரும், 12வது வரை படித்தவர்கள் 4 சதவிகிதத்தினரும், படித்தவர்கள் 4 சதவிகிதத்தினரும், புரஃபொஷனல்-ல் 4 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
dmk top education wise vote share exit poll - எக்சிட் போல்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X