Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி தேர்தல்.. "ஆசையோடு" கூட்டணிக் கட்சிகள்.. "ம்ஹூம் நடக்காது.." திமுக போடும் செம ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு அடம் பிடிக்கும் கூட்டணிக் கட்சிகளை வழிக்குக் கொண்டு வர புதிய அஸ்திரம் ஒன்றைப் பிரயோகிக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வென்றன.

மாவட்ட கவுன்சிலராக தேர்தலில் மொத்தமுள்ள 138 இடங்களில் திமுக கூட்டணி 138 தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக கூட்டணி வென்றது.

 உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

இந்தத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் படுதோல்வி அடைந்தன. குறிப்பாக வெறும் 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்தத் தேர்தல் இப்படியொரு மோசமான தோல்வியைச் சந்திக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 140 மாவட்ட கவுன்சிலர்களான தேர்தலில் வெறும் ஒற்றை இலக்கிலேயே அதிமுக வென்று இருந்தது. அதேபோல 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 100க்கும் குறைவான இடங்களிலேயே அதிமுக வென்றிருந்தது.

விஸ்வரூப வெற்றி

விஸ்வரூப வெற்றி

அதேபோல இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கிய பாமகவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. இந்த விஸ்வரூப வெற்றியை திமுக கொண்டாடித் தீர்த்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வெறும் 6 மாதங்களில் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளதாகவும் இந்த ஆறு மாத நல்லாட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு தான் இந்த விஸ்வரூப வெற்றி என்று திமுக கூறியது.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

இதே வேகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என நினைக்கிறது திமுக. ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு பட்ஜெட்க்கு முன்பாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்துக் கடந்த வாரம் திமுக மா.செக்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

ஆலோசனை

ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் நடவடிக்கைகளை திமுகவினர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் திமுக மா.செ.க்களிடம் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துவிட்டார். வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்பதே கூட்டணிக் கட்சிகளின் விருப்பமாக உள்ளது.

 புதிய அஸ்திரம்

புதிய அஸ்திரம்

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு அடம் பிடிக்கும் கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வர புதிய அஸ்திரம் ஒன்றைப் பிரயோகிக்கவிருக்கிறது. திமுக. தேர்தல் தேதி அறிவித்ததும் சீட் பகிர்வு குறித்து கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் திமுக மா.செ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளுமே டபுள் டிஜிட்டுகளில் சீட்டுகளை பெற இப்போதே திட்டமிட்டிருக்கின்றன.

 வேட்பாளர் இருக்கிறீர்களா?

வேட்பாளர் இருக்கிறீர்களா?

அப்படி டபுள் டிஜிட்டுகளில் சீட் கேட்டால், இரு வார்டுக்கு ரூ 1 கோடியிலிருந்து ஒன்னரைக் கோடி வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். அப்படி செலவு செய்தால் தான் அதிமுகவை உங்களால் சமாளிக்க முடியும். இல்லைன்னா தோத்துப் போய்விடுவீர்கள். அதனால், இந்த வார்டுகளையெல்லாம் நீங்கள் கேட்கிறீகள் அல்லவா, அந்த வார்டுகளில் ஒன்னரை கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய வேட்பாளர் உங்க கட்சியில் யார் இருக்காங்கன்னு சொல்லுங்க. அது சரிதான்னான்னு பார்த்துட்டு முடிவு செய்யலாம் எனப் பேச்சுவார்த்தையில் சொல்கிற அஸ்திரத்தை கையிலெடுக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக.

 கடைசி காரணம்

கடைசி காரணம்

ரூ 1 கோடி, ரூ 1.50 கோடி செலவும் செய்யும் ஆட்கள் கூட்டணிக் கட்சிகளிடத்தில் இருக்க மாட்டார்கள் என யோசித்தே இந்த திட்டத்தைப் போட்டிருக்கிறது. அதேசமயம், ஒருவேளை, இதையும் தாண்டி திமுகவின் நிபந்தனைபடி பண வலிமைமிக்க நபரை அடையாளம் காட்டினால், அந்த வார்டு திமுகவின் கோட்டை அதை எப்படி ஒதுக்க முடியும் என தர மறுக்கும் யுக்தியையும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திமுகவிடம் கணிசமான, கௌரவமான சீட்டுகளைப் பெறக் கூட்டணிக் கட்சிகள் குட்டிக்கரணம் அடிக்க வேண்டியதிருக்கும் என்றே கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+