முந்திக்கொண்ட அதிமுக.. தவறவிட்ட திமுக.. 18 தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் இதை செய்வாரா?
தமிழகத்தில் நடக்க உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அனைத்து தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அனைத்து தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது.
3 இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடக்கவில்லை. வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது, அதோடு சேர்த்து 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.

அதிமுக போட்டி
இந்த சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அதிமுக போட்டியிட இருக்கிறது. இந்த இடைதேர்தலால் ஆட்சி கவிழ கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால், அனைத்து தொகுதியிலும் அதிமுக போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இதில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளது.

ஒப்பந்தம் செய்தது
இதற்கான ஒப்பந்தத்தை செய்துவிட்டுத்தான் அதிமுக லோக்சபா தேர்தல் கூட்டணியை உருவாக்கியது. அதிமுகவிற்கு தமிழக சட்டசபை தேர்தலில் பாமக, பாஜக , தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது.

திமுக
ஆனால் திமுக அப்படிப்பட்ட ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை. அதிமுக இதில் சுதாரிப்பாக செயல்பட்டது போல திமுக இதில் சுதாரிப்பாக செயல்படவில்லை. இதனால் தற்போது திமுக கூட்டணி 18 எம்எல்ஏக்கள் சட்டசபை இடைத்தேர்தலில் எப்படி போட்டியிட போகிறது என்ற பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது.

ஏன் அனைத்து தொகுதி
அதிமுக இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட உள்ளது. இதனால் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாது. அதனால் அதிமுகவை எதிர்த்து திமுக போட்டியிடுவது மட்டுமே சரியானதாக இருக்கும். அதிமுகவிற்கு எதிராக வேறு கட்சிகளை களமிறக்கினால் அது பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும்.

பிரச்சனை
ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறுகிறார்கள். திமுக கூட்டணியில் இவர்கள் இரண்டு இடங்கள் வரை இடைத்தேர்தலுக்காக கேட்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் திமுக மீண்டும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மிக முக்கியம்
திமுக கூட்டணியின் தற்போதைய சட்டமன்ற பலம் 97. அவர்கள் 18 தொகுதியில் அனைத்திலும் வென்றாலும் 115 இடங்களை மட்டுமே பெற முடியும். அதன்பின் வேறு ஒரு உறுப்பினரின் உதவியுடன்தான் ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் திமுக 18 தொகுதியிலும் வெல்வதற்காக உழைக்க வேண்டும். இதனால் திமுக மிக முக்கியமான நபர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications