பற்றி எரியும் பொள்ளாச்சி.. அதிமுக கோட்டையில் தில்லாக கால் வைக்கும் திமுக!
Recommended Video

சென்னை: வரும் தேர்தலில் பொள்ளாச்சியில் திமுக நேரடியாக போட்டியிட போகிறதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை எல்லாம் நன்கு உணர்ந்துதான் அறிவித்ததா, அல்லது தெரியாமல் நடந்த அறிவிப்பா என்றுதான் தெளிவாக தெரியவில்லை!
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களை எடுத்துக் கொண்டால், 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்றால் ஒரே ஒருமுறைதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே பொள்ளாச்சி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை!
இதற்கு முக்கிய காரணம், பொள்ளாச்சி பக்கம் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் ரசிகர்கள். ஜெயலலிதா இருக்கும்போதும் இதே பலத்தைதான் தக்க வைத்து கொண்டிருந்தார். எனவேதான் பொள்ளாச்சியில் திமுகவால் சோபிக்க முடியவில்லை.

ஈஸ்வரன்
கடந்த முறை 2014 நடைபெற்ற தேர்தலின்போது, திமுக சார்பாக பொங்கலூர் பழனிசாமியை நிறுத்தினார்கள். ஆனால் அவரால் 3-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. 2-வது இடம் கொங்கு மண்டல ஈஸ்வரனுக்கு போய் சேர்ந்தது.

பலாத்காரம்
கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு மண்டலம் என சொல்லப்படும் பொள்ளாச்சியில் திமுக இப்போதும் நேரிடையாகவே போட்டியில் இறங்குகிறது. ஆனால் இப்போதைக்கு திமுகவுக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான சூழ்நிலை பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்தான்.

வாக்கு வங்கி
சம்பவத்தை மையப்படுத்தி போராட்டமும் நடத்தியது. அதிமுகமேல் உள்ளஅதிருப்தியால் வாக்கு வங்கி சாதகமாகும் என திமுக கணக்கு போடுகிறது. ஒருவேளை இந்த கணக்கு சரியாகவே இருந்தாலும், திமுக வேட்பாளர் யார் என்பதை பொறுத்துதான் இது அமையும்.

நல்ல வேட்பாளர்
எந்தவித ஊழல் குற்றச்சாட்டும், புகாரும் இல்லாத ஒரு நல்ல வேட்பாளரை நிறுத்தினால், அத்துடன் "நிறைய " விஷயங்களில் தொகுதி மக்களை திருப்திப்படுத்தினால் மட்டுமே வெற்றி என்பது கிடைக்க வாய்ப்பு. ஒருவேளை வெற்றி கிடைக்காவிட்டாலும் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு நிச்சயமாக திமுகவால் வர முடியும். அப்படி வந்தால் அதுவே திமுகவுக்கு ஒரு வெற்றிதான்.

டிடிவி தினகரன்
திமுகவுக்கு மற்றொரு சாதகமும் உள்ளது. அன்று அதிமுக ஒன்றாக இருந்தது. இன்று அமமுக என்று பிரிந்துவிட்டது. கட்சி பிரிந்து முதல்முறையாக எம்பி தேர்தலை சந்திக்க உள்ளதால் அதிமுக வாக்குகள் பிரியவும் வாய்ப்பு உள்ளது. ஆக அதிமுக இரண்டாக பிரிந்ததும், பொள்ளாச்சி சம்பவமும் திமுகவுக்கு பிளஸ் பாண்யிட்களாக உள்ளன. இவற்றை எப்படி பயன்படுத்தி திமுக இந்த தொகுதியை வசமாக்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications