திமுகவுக்கு தனி மெஜாரிட்டி உறுதி.. கணித்து கூறிய ‘தி இந்து' என் ராம்! விஜய்யால் ஒன்னும் செய்ய முடியாது
சென்னை: ''தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை. கருத்து கணிப்புகள், பத்திரிகையாளர்களின் களஆய்வுகளின் அடிப்படையில் ஆளும் கூட்டணிக்கு கிளியர் மெஜாரிட்டியும், திமுக தனிப்பெரும் கட்சியாகவும் வருவதாக சொல்கின்றனர். இதனால் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைப்பதற்கான சாத்தியமும் உள்ளது என நம்புகிறேன் மூன்றாவது என்று ஒரு கட்சி இருந்தாலும் கூட திமுகவுக்கு தெளிவான முன்னிலை இருப்பதை களநிலவரங்கள் காட்டுகின்றன'' என மூத்த பத்திரிகையாளரான 'தி இந்து' என் ராம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியல் களமாக இந்த சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்று 4 முனை போட்டி இருந்தது. குறிப்பாக விஜய்யின் அரசியல் வருகை தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே தான் தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 85.15 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் 73.63 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. ஆனால் தற்போது அதைனை விட அதிகப்படியான வாக்குகள் பதிவாகி உள்ளது. இது தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
விஜய்யால் யாருக்கு வேட்டு?
இந்த வாக்கு சதவீதம் உயர்வுக்கு 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் வருகையால் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்களித்ததையும் பல பூத்களில் பார்க்க முடிந்தது. இதனால் தான் விஜய் பெறும் ஓட்டுகள் திமுக, அதிமுகவில் யாருக்கு வேட்டு வைக்கப்போகிறது? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தொங்கு சட்டசபை வருமா?
இந்நிலையில் தான் மூத்த பத்திரிகையாளரான 'தி இந்து' என். ராம், ''இந்தியா டுடே' சேனலில் இண்டர்வியூ கொடுத்தார். அப்போது பத்திரிகையாளர், ''தற்போதைய நிலையில் தமிழகத்தில் 3வது சக்தியாக ஒரு கட்சி வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையுமா? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
திமுகவிற்கு மெஜாரிட்டி உறுதி
அதற்கு என் ராம், ''தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை என்ற நான் சொல்கிறேன். திமுக கூட்டணிக்கு கிளியர் மெஜாரிட்டி கிடைக்கும். திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அவர்கள் பலமாக உள்ளனர். கருத்து கணிப்புகள், பத்திரிகையாளர்களின் களஆய்வுகளின் அடிப்படையில் ஆளும் கூட்டணிக்கு கிளியர் மெஜாரிட்டியும், திமுக தனிப்பெரும் கட்சியாகவும் வரும்.
திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைப்பதற்கான சாத்தியமும் உள்ளது என நம்புகிறேன். இதனை தான் பல சைன்கள் காட்டி உள்ளன. மூன்றாவது என்று ஒரு கட்சி (விஜய்யின் தவெக) இருந்தாலும் கூட திமுகவுக்கு தெளிவான முன்னிலை இருப்பதை களநிலவரங்கள் காட்டுகின்றன'' என்று கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications