பதவியாவது.. கிதவியாவது.. கடலை சாப்பிட்டபடியே கூலாக பதிலளித்த பெரியசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்த்த திமுக ஆட்சியை இழந்துள்ளது. தவெகவுக்கு போட்டியளிப்பதற்காக திமுக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் பதவிகளுக்கு இனி வயது வரம்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு எந்தவித பரபரப்பும் இல்லாமல் கடலை சாப்பிட்டுக் கொண்டே முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான பெரியசாமி கூலாக பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சட்டமன்ற தேர்தல் தோல்வி திமுகவை ரொம்பவே கலங்கடித்துள்ளது. அதிமுக மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். தவெகவின் கட்டமைப்பு பலமடைந்து கொண்டிருக்கிறது. தவெகவில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தவெகவுக்கு அரசியலில் போட்டி கொடுப்பதற்காக திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக ஜென் ஸி இளைஞர்களை கட்சியில் இணைக்க முயற்சித்து வருகிறார்கள்.

dmk-posts-may-get-age-limit-dmk-mla-periyasamy-gives-a-cool-response

திமுகவில் நிர்வாகிகள் வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளது. கிளை செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 45, பேரூர், நகர செயலாளருக்கு 60 வயது, மாவட்ட செயலாளருக்கு 70 வயது என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியை பொறுத்து 2 அல்லது 3 முறை மட்டுமே தொடர முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல சீனியர்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுகவில் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சிப் பதவிகளில் இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திமுகவில் பதவிகளுக்கு இனி வயது வரம்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கடலை சாப்பிட்டுக் கொண்டே முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான பெரியசாமி கூலாக பதிலளித்தார். அவர் கூறுகையில், எல்லோருக்கும் வாய்ப்பு வர வேண்டும். எங்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதனால், தலைவரின் முடிவு நல்ல முடிவாகும்.

மொத்தத்தில் சொல்கிறேன் தலைவரின் முடிவு அருமையான முடிவு. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இளைஞர்கள், மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, நல்லா கொடுக்கட்டும். தலைவர் பார்த்து கொடுத்தால் நல்லது தான். நன்றாக இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+