நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஃபெர்பாமன்ஸ் எப்படி? அலசி ஆராயத் தொடங்கிய திமுக தலைமை!
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஃபெர்பாமன்ஸ் எப்படி என்பது குறித்த ரிப்போர்ட்டை அலசி ஆராயத் தொடங்கியிருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
தொகுதிக்கு யார் யார் என்னென்ன செய்திருக்கிறார்கள், தனிப்பட்ட செயல்பாடுகள் எப்படி என்பதை பற்றியெல்லாம் அறிந்துகொள்ள அவர் ஆவல் காட்டுவதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதாலும், 2024-ல் தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் முழு வெற்றிபெற வேண்டியும் அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியிருக்கிறாராம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலாகும். இந்த தேர்தலில் தப்பித் தவறி சில தொகுதிகளில் தோல்வியை தழுவினாலும் அது ஆட்சிக்கு கிடைத்த மைனஸ் ஆக பார்க்கப்படும் என்பதால் எப்பாடுபட்டேனும் தமிழகம் புதுச்சேரி உட்பட 40க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

ரிப்போர்ட் தயார்
இதனால் இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் அவர், தொகுதிக்கு யார் யார் என்னென்ன செய்திருக்கிறார்கள், தனிப்பட்ட செயல்பாடுகள் எப்படி என்பது பற்றியெல்லாம் விவரம் சேகரிக்க ஆரம்பித்துள்ளார். திமுக எம்.பி.க்கள் மட்டுமின்றி காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்டும் தயாராகி வருகிறது.

மீண்டும் சீட்
தற்போதைய நிலவரப்படி கடலூர் உள்ளிட்ட குறைந்தது 7 முதல் 10 எம்.பி.க்களுக்காவது மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு திருப்தியளிக்கவில்லை என்பது காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் கட்சிக்கும், கட்சிக்காரர்களுக்கும் புத்துணர்வு கிடைக்கும் என்பது கட்சித் தலைமையின் நம்பிக்கையாக உள்ளது.

போட்டி கடுமை
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதாலும், தேர்தல் வெற்றிக்காக பாஜக பல அஸ்திரங்களை கையில் எடுக்கும் என்பதாலும் ஸ்டாலின் இப்போதே மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications