தேர்தல் கில்லாடி பரணி கார்த்திகேயன்... மு.க.ஸ்டாலின் சர்டிஃபிகேட்
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயனை தேர்தலில் கில்லாடி என மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார்.
அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் அவரை சேர்ப்பதற்கு முன்பு திமுக மாவட்டச் செயலாளர் ரகுபதியிடம் பரணி கார்த்திகேயனை பற்றி முழு விவரத்தையும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.

தேதி இல்லை
ரகுபதி அளித்த பதில் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் பரணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்து கட்சியில் இணைத்துக்கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து புதுக்கோட்டையில் வைத்து ஆதரவாளர்கள் இணைப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தேதி கேட்டு வந்தார் பரணி கார்த்திகேயன். செந்தில்பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு தேதி கொடுத்து கரூர், தேனிக்கு நேரடியாக சென்ற ஸ்டாலின் பரணிக்கு புதுக்கோட்டை வர தேதி கொடுக்கவில்லை.

75 பேருந்துகள்
இந்நிலையில் சென்னையிலேயே இணைப்பு விழாவை நடத்துமாறு தலைமைக்கழகத்தில் இருந்து பரணி கார்த்திகேயனுக்கு கடந்த வாரம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து 75 பேருந்துகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தமது ஆதரவாளர்களை நேற்றிரவு அழைத்து வந்து இன்று காலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தார் பரணி கார்த்திகேயன்.

கட்சிக்கொடி
வழக்கமாக மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா என்றால் அண்ணா சாலையில் விளம்பர பதாகைகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் இன்று விழா நடந்ததற்கான சுவடே தெரியவில்லை, அந்தளவுக்கு எந்த பேனரும் வைக்காமல் வெறுமனே கட்சிக்கொடியை மட்டும் பறக்கவிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முகத்தில் பிரகாசம்
வரும் தேர்தல்களில் பரணி கார்த்திகேயனுக்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்தும்வகையில், இப்போது பரணிகார்த்திகேயனை வரவேற்று வாழ்த்துகிறேன், விரைவில் அவரை பாராட்டவும் செய்வேன் என பொடி வைத்து பேசினார் ஸ்டாலின். இதைக்கேட்டு ஆயிரம் வாட்ஸ் பல்பை போல் பிரகாசித்தது பரணி கார்த்திகேயன் முகம். உடனடியாக எழுந்து நின்று ஸ்டாலினை நோக்கி தலைவணங்கினார்.
|
காலில் விழ வேண்டாம்
பரணி கார்த்திகேயனை பற்றி விசாரித்ததில் அவர் தேர்தலில் கில்லாடி என என தகவல் கிடைத்தது என ஸ்டாலின் பேச, மீண்டும், பரணிக்கு இருப்புக் கொள்ளவில்லை, எழுந்து நின்று வணங்கினார். இதைக்கவனித்த ஸ்டாலின், திமுகவில் காலில் விழும் கலாச்சாரம் இல்லை என்றும், யாரையும் யாரும் துதிபாடத்தேவையில்லை எனவும் பேசினார். இதைப்புரிந்துகொண்ட பரணி தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications