இனிய நண்பர் சூப்பர் ஸ்டார்... இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 70-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள ஸ்டாலின், இனிய நண்பர் சூப்பர் ஸ்டாரை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் எல்லா வளங்களையும் பெற்று உடல்நலத்துடன் மிக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

70-வது பிறந்தநாள்

70-வது பிறந்தநாள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுவதால் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தொலைபேசி மூலமாகவும் சிலர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டும் தங்கள் வாழ்த்தை பதிவு செய்கின்றனர்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

நீண்ட நாட்கள்

மேலும், நல்ல உடல்நலத்துடனும், மன நலத்துடனும், வளத்துடனும் மிக நீண்ட நாட்கள் ரஜினிகாந்த் வாழ வேண்டும் என வாழ்த்தி மகிழ்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட 6 நொடிகளுக்குள் அதை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்தனர்.

பட்டம்

பட்டம்

இதனிடையே திரு.ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் என்று சாதாரணமாக கூறப்படுவதுண்டு, ஆனால் ஸ்டாலினோ தனது வாழ்த்துச் செய்தியில் இனிய நண்பர் என்றும், சூப்பர் ஸ்டார் எனவும் இந்த முறை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+