அப்பா.. ஜெயிச்சுட்டேன் அப்பா.. கருணாநிதி சமாதியில் ஸ்டாலின் குடும்பத்துடன் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியானது. இதில் 351 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சலசலப்பு

சலசலப்பு

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக பதவியேற்றார் அவரது மகனான ஸ்டாலின். ஸ்டாலின் திமுக தலைவரானதற்கு அவரது குடும்பதிற்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டது.

38 தொகுதிகள்

38 தொகுதிகள்

இதனால் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானார் ஸ்டாலின். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

சாதித்த ஸ்டாலின்

சாதித்த ஸ்டாலின்

இதனால் கருணாநிதிக்கு பின் தன்னால் கட்சியை சரியாக வழிநடத்த முடியும் என சாதித்துக்காட்டியுள்ளார் ஸ்டாலின். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்த மகத்தான வெற்றியை காண கருணாநிதி இல்லையே எனக்கூறி வருத்தப்பட்டார்.

குடும்பத்துடன் அஞ்சலி

குடும்பத்துடன் அஞ்சலி

இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கட்சியினரும் அஞ்சலி

கட்சியினரும் அஞ்சலி

அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரை முருகன், தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஜெ அன்பழகன் உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+