ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் யாருக்கு கிடைக்கும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 164 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திமுகவின் கதாநாயகன் என அழைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்றைய தினம் மாலை 6.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் அறிக்கையை தயாரித்த என் அருமை தங்கை கனிமொழிக்கு நன்றி. மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது.
முதல்வரின் காப்பீடு திட்டம் ரூ 10 லட்சமாக அதிகரிக்கப்படும். 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். புதுமைப் பெண் திட்டத்தில் ரூ 1500 ஆக உயர்த்தி தரப்படும். டயாலிசிஸ் வசதிகள் இரு மடங்காக வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு 8ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும்.5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ 1500 மாத உதவித் தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
புதிதாக 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
ரூ 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரு மடங்காக்கப்படும்.
5000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இல்லத்தரசி கூப்பன்: 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சிஸ மைக்ரோவேவ் ஓவன், மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் எனும் போது ஆண்டு வருமானம் ரூ 4 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். மாத வருமானம் 33 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்பதுதான். எனினும் வரும் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் போதுதான் இதன் விதிமுறைகள் முழுமையாக தெரியவரும்.
அதிமுக தேர்தல் அறிக்கை
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 2,22,91,710 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிகிறது. இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் திட்டம் போல் இலவச பிரிட்ஜ் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு பெற தகுதியான ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த இலவச பிரிட்ஜ் கொடுக்கப்படும் என்றே தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications