மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் கவர்ந்ததாக நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். ரூ.8 ஆயிரம் கூப்பன் மூலமாக பழைய சாமான்களையும் மாற்றிக் கொள்ள முடியும், அதேபோல் புதிய பொருட்களையும் வாங்க முடியும் என்றும் ரோகிணி கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக தரப்பில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மகளிர் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சாமான்களை வாங்கிக் கொள்ள முடியும்.

DMK

இதனை முன்னிலைப்படுத்தியே திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்காக புதுச்சேரியில் நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக நடிகை ரோகிணி பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

அதேபோல் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்.. இது பழைய சாமான்களை மாற்றவும் முடியும்.. புதிய சாமான்களை வாங்கி கொள்ளவும் முடியும். இந்த இரு திட்டங்களும் என்னை ஈர்த்துள்ளது. அதேபோல் இளைஞர்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏற்கனவே செய்து வருகிறார்கள். அதுவும் வரவேற்புக்குரியது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆனால் இதுவரை பாஜக பெற்றுக் கொடுக்கவில்லை. பாஜக எங்களுக்கு வாக்கு போடுங்க என்று கேட்கிறது. ஆனால் மக்களுக்கு தேவையானதை செய்ய மறுத்து கள்ள மவுனம் காக்கிறது. புதுச்சேரி மக்களில் 50% பேர் வாடகை வீடுகளில் தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.

புதுச்சேரி என்பது ஸ்பிரிச்சுவல் ஊராக இருந்தது. இப்போது ஸ்பிரிட் ஊராக மாற்றிவிட்டார்கள். புதுச்சேரியில் ஐடி தொழிற்பூங்காக்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தான் அதிகளவில் இளைஞர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+