காலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
Recommended Video
சென்னை: குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு- பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைகின்றனர். சிறிது சிறிதாக வரும் ஊற்று நீரை பிடிப்பதிலும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு திமுகவினர் தண்ணீர் கொடுத்து உதவுமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன்படி திமுக பிரமுகர்களும் லாரி மூலம் தண்ணீரை விநியோகம் செய்தனர். ஆனால் அமைச்சர் எஸ் பி வேலுமணியோ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இல்லை என கூறினார்.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி இன்று முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக வேண்டுகோள் விடுத்திருந்தது. தண்ணீர் பிரச்சினையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் காலிக் குடங்களுடன் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை வில்லிவாக்கத்தில் எம்பி தயாநிதி மாறன், சேகர் பாபு, ஜாபர்கான்பேட்டையில் மா சுப்பிரமணியன், திருச்சியில் கே என் நேரு, திருவண்ணாமலையில் எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications