குடிநீருக்காக.. சென்னையை அதிர வைத்த திமுக போராட்டம்.. கனிமொழி, தயாநிதிமாறன் களத்தில் குதித்தனர்
சென்னை: தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி, சென்னை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது திமுக.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கடந்த 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க திமுக ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகிறது.


இந்த நிலையில் சென்னை பிராட்வே பிரகாசம் சாலை பகுதியில் இன்று காலை, திமுக மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதில் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி பங்கேற்றார். அதில், காலி குடங்களை ஏந்தியபடியும், தமிழக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடைபெற்றது.


பிராட்வேயில் தொடங்கிய இந்த பேரணி முத்தியால்பேட்டையில் முடிவடைந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல, சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பிரச்சினையை கண்டுகொள்ளாத அரசின் மெத்தன போக்கினை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்டத் திமுக மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் துறைமுகம் பகுதியில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது. கனிமொழி, எம்.பி., மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ. தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications