மோடி மீது அம்பானி, அதானி கோபம்.. நேற்று அப்படி என்னதான் நடந்தது? பாயிண்டை பிடித்த திமுக
சென்னை: பிரதமர் ஏன் நேற்று எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசவில்லை? என்று திமுக சார்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாள் தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடி தனது உரையில் கேள்வி எழுப்பினார்.

மோடி பேச்சு; பிரதமர் மோடி தனது பேச்சில், கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸின் இளவரசர், காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று கோஷமிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஃபேல் விவகாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் அம்பானி அதானி என்று கோஷமிட்டார். அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்
இந்த தேர்தலில் இளவரசர்ராகுல் காந்தி அம்பானி-அதானியிடம் இருந்து எவ்வளவு வாங்கினார் என்று தெலுங்கானா நிலத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா? அம்பானி-அதானியை பற்றி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.
உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் டீலிங் என்ன?. ஐந்து வருடங்களாக அம்பானி-அதானியை துஷ்பிரயோகம் செய்து ஒரே இரவில் நிறுத்திவிட்டீர்கள். அப்படி என்றால் உங்களுக்கும் அம்பானி - அதானிக்கும் இடையில் ஏதோ இருக்கிறது. இதற்கு நீங்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
காங்கிரஸையும் தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சியையும் இணைக்கும் ஒரே 'பேஸ்ட்' ஊழல். சில மதங்களை ஆதரிக்கும் அரசியல் தான் அவர்களின் செயல்திட்டம். காங்கிரஸும் பிஆர்எஸ்ஸும் 'ஜீரோ கவர்னன்ஸ் மாடலை' பின்பற்றுகின்றன. எனவே, இந்த கட்சிகளின் ஊழல் பிடியில் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, தலித்துகளுக்கான இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து முஸ்லிம் சமூகத்துக்கும் வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இந்துக்களின் நலனை உறுதி செய்வது அவர்களின் திட்டமோ அல்லது யோசனையோ அல்ல. காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்க விரும்புகிறது. இந்த ஊழல் கட்சி இந்துக்களை பற்றி கவலையே படுவது இல்லை, என்று தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராகுல் காந்தி பதிலடி: இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பதிலில், "மோடி ஜி வணக்கம்.. நீங்கள் பயந்துவிட்டீர்களா என்ன.. பொதுவாக நீங்கள் மக்களுக்குத் தெரியாமல் தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். ஆனால், இந்த முறை முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லாரியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது பாருங்கள்.. இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா?, என்று கூறியுள்ளார்.
திமுக கேள்வி: இந்த நிலையில் பிரதமர் ஏன் நேற்று எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசவில்லை? என்று திமுக சார்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில், பிரதமர் ஏன் நேற்று எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசவில்லை? அம்பானியும், அதானியும் ஏதேனும் கோபித்துக் கொண்டார்களா? இல்லை ஏதாவது ட்ரக் வந்திருக்கிறதா? #Elections2024, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications