தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையின் போது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்.. ஆர்.எஸ். பாரதி கேள்வி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டசபை கூட்டத் தொடரின் போது அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முன்பே வைத்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் பேசிய குறிப்புகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு அரசு தயாரித்த உரையே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில் இன்றைய தினம் (நேற்றைய தினம்) தமிழ்நாட்டினுடைய முதல்வர் சட்டமன்றத்தில் தகர்த்து எறிய கூடிய வகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நடத்தி காட்டியுள்ளார்.

தமிழக முதல்வர்
தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றபோது நான் நினைத்தேன் எதற்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என பதவியேற்கிறார் என்று! முத்துவேல் கருணாநிதிக்கு கொடுத்த தைரியம், இவர்கள் இருவரும் கொடுத்த தைரியத்தை ஏற்று நான் பதவியேற்கிறேன் என்று நினைத்து பதவியேற்று கொண்டதற்கு அடையாளம்.

கருணாநிதியின் தைரியம்
1972- 1973 ஆம் ஆண்டு நமக்கும் டெல்லிக்கும் ஒரு பிரச்சினை வந்தது. அந்த நேரத்தில் இந்திரா காந்தியை அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்துக் கொண்டு உறவுக்கு கை கொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என எந்த கருணாநிதி சொன்னாரோ அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். இதுதான் திமுக.

சட்டசபை
இன்று சட்டசபையில் இருந்து மட்டும் நீங்கள் ஓடியிருக்கிறீர்கள். நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ அது போல் தமிழகத்து மக்களும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை அம்பேத்கரிடம் நேரு ஒப்படைத்தார்.

ராஜேந்திர பிரசாத்
உங்கள் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சட்ட வரைவு கமிட்டியின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா அம்பேத்கரைத்தான். அவர் எழுதிய சட்டத்தைதான் இன்று வரை 73 ஆண்டு காலம் நாம் கடைப்பிடித்து வருகிறோம். அந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த ரிப்பன் பில்டிங்கில் ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாதாரண குடிமகளான பிரியா ராஜனை உட்கார வைத்த பெருமை அரசியல் சட்டம் நமக்கு அளித்த உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால்
நேற்று ஆளுநர் நடந்து கொண்டதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும் முதல்வராக இருந்திருந்தால்... என்ன ஆகியிருக்கும்? ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புகிறார்கள். அது 5ஆம் தேதி ஆளுநருக்கு கிடைத்து அதில் கையெழுத்திட்டு 7 ஆம் தேதி மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.

ஆதாரம் இருக்கு
திமுகவை பொருத்தமட்டில் நாங்கள் கலைஞரின் பயிற்சி பெற்றவர்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்க மாட்டோம். ஆதாரம் இல்லாமல் எதையும் காட்ட மாட்டோம். 7ஆம் தேதி படித்து பார்த்துவிட்டு சில திருத்தங்களையும் ஆளுநர் முன் வைத்தார். அதையும் மாநில அரசு செய்தது. அண்ணா ஏற்கெனவே சொல்லியுள்ளார்- ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என! ஆனால் அண்ணாவினுடைய பெயரையே தவிர்த்து பேசினார். இவ்வாறு ஆர் எஸ் பாரதி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications