ஏதோ பிளான் இருக்கு.. VVPAT முறையில் ஏன் திடீர் மாற்றம்? தேர்தல் ஆணையத்தில் சந்தேகம் கிளப்பிய திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வி.வி.பாட் முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, தலைமை தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லோக்சபா நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

DMK raises doubts on VVPAT: RS bharathi press meet after met ECI chief

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 6ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய்பாது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 3 துணை ஆணையர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தங்கள் முறையீடுகளையும் தெரிவித்தனர்.

திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, "முதல்முறையாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் விவிபாட் கொண்டு வரப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவிபாட் முறையில் செய்யப்பட உள்ள மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் விவிபாட் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்தல் ஆணையம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தல் புகார்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரியே நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். எத்தனை கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தினாலும் திமுக சந்திக்க தயார்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கக்கூடும் என்றும், நாம் ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேறு ஒரு கட்சிக்கு வாக்குகள் பதிவாகாதது போல செட் செய்யலாம் என எழுந்த தொடர் குற்றச்சாட்டு காரணமாக விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டது.

அதன்படி, வாக்காளர்கள் வாக்களித்த பிறகு, விவிபாட் இயந்திரத்தில் அவர்கள் வாக்களித்த சின்னம் ரசீதாக வரும், அது விவிபாட் இயந்திரத்தில் காட்டப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, விவிபாட் இயந்திரங்களில் உள்ள வாக்குகளும், இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் சரிபார்க்கப்படும்.

கடந்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் இயந்திரம் வைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக திமுக சந்தேகம் எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+