படம் சூப்பர், 100 நாள் ஓடும்! விஜய் மாநாடு.. திமுக ராஜீவ் காந்தி கிண்டல்! கொந்தளித்த தவெக தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய விஜய், பல்வேறு அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்தார். இதற்கிடையே விஜய்யின் இந்த பேச்சை நக்கல் செய்யும் வகையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனத்தை எதிர்த்தும் ஆதரித்தும் பல வித கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் சினிமாவை விட்டுவிட்டு இப்போது அரசியலில் இறங்கியுள்ளார். இப்போது ஒரு படத்தில் நடித்து வரும் விஜய், அத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளார்.

tvk maanadu dmk actor vijay

இதற்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியையும் தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த மாநாடு திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது.

விஜய் மாநாடு: இந்த மாநாட்டில் இறுதியாகப் பேசிய விஜய், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். கட்சியின் கொள்கைகள், வழிகாட்டிகள் குறித்தும் அவர் விரிவாக விளக்கிப் பேசினார். அதேநேரம் தற்போது களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளை விமர்சிக்கவும் செய்தார். அரசியல் கட்சிகள் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட பல்வேறு அரசியல் கட்சிகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.

இதற்கிடையே இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கிண்டலாக ஒரு ட்வீட் செய்துள்ளார். விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாகவும் இந்த படம் கூட 100 நாள் ஓடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

திமுக ராஜீவ் காந்தி: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!! Good flim.. 100 நாள் திரையரங்கிளும்!! ஓடிடியில் கொஞ்சநாளும் ஓடும்!.. வாழ்த்துகள் விஜய்" என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்துள்ளார்.

நெட்டிசன்கள்: இதற்கு இணையத்தில் இரு வேறுவிதமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். திமுக ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையிலேயே ட்வீட் செய்து வருகிறார்கள். அதேநேரம் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ராஜீவ் காந்தியின் இந்த ட்வீட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிலளித்து வருகிறார்கள்.

திராவிட இயக்க தலைவர்கள்: முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய், திராவிட இயக்க தலைவர்கள் குறித்தும் பேசியிருந்தார். குறிப்பாகப் பெரியாரை தங்கள் வழிகாட்டியாக ஏற்பதாக அவர் குறிப்பிட்டார். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்ன விஜய், அதேநேரம் பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் பெரியார் கொள்கைகளைப் பின்பற்றப் போவதாக அறிவித்தார்.

கடவுள் மறுப்பு இல்லை: யாருடைய கடவுள் நம்பிக்கையிலும் தலையிடப் போவது இல்லை என்று சொன்ன விஜய், அண்ணா சொன்னதை போலவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே தங்கள் கொள்கை என்று குறிப்பிட்டுப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+