"நாச்சியப்பா பாத்திர கடை".. பாஜக ஆளை வைத்து ஐஎஸ்ஓ வாங்கிய வானதி சீனிவாசன்.. போட்டு உடைத்த திமுக
சென்னை: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தொகுதி அலுவலகத்திற்கு வானதி சீனிவாசன் ஐஎஸ்ஓ தரசான்றிதழ் வாங்கியதை திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், எனது கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகம், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற, தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பது பிரதமரின் தாரக மந்திரம்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் திரு. ஜெ.பி. நட்டா ஆகியோரின் தலைமையில், கட்சியின் பணி கலாச்சாரத்தை மேம்படுத்தவும், மிகுந்த அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்யவும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காகவே நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்தமாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2011-ம் ஆண்டு திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவரது அலுவலகம் ஐ.எஸ்.ஓ. சான்றிதழைப் பெற்றது. திறமையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதில் அன்றைய முதலமைச்சர் மோடியும், அவரது அலுவலகமும் காட்டிய அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த சான்றிதழ். சட்டமன்றக் கடமைகள், தொகுதிப் பிரதிநிதித்துவம், கொள்கை செல்வாக்கு, சமூக ஈடுபாடு, வளர்ச்சிக்கான முயற்சிகள், மேற்பார்வை, நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்களில் எங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த தர மேலாண்மை அமைப்பை ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் அங்கீகரிக்கிறது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ள ஐ.எஸ்.ஓ. சான்றிதழ், மக்கள் சேவையில் எங்கள் குழுவின் முழுமையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. கோவை தெற்கு தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உயர்தர சேவைகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் செயல்பாடுகள், சேவைகளில் சர்வதேச தரத்தை கடைபிடிக்கிறோம். கோவை தெற்கு தொகுதி அலுவலகத்துடனான அனைத்து தொடர்புகளிலும் மேம்பட்ட செயல்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த சாதனையை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஆகியோரிடம் நேரில் தெரிவித்தேன், என்று கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி பதிலடி; கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தொகுதி அலுவலகத்திற்கு வானதி சீனிவாசன் ஐஎஸ்ஓ தரசான்றிதழ் வாங்கியதை திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
கோவில் சினிமாவில் நடிகர் வடிவேல் நாச்சியப்பா பாத்திர கடையில் CUP வாங்கியது போல் 5000 ரூபா கொடுத்து சான்றிதழ் வாங்கிய வானதி சீனிவாசன். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது அலுவலகத்திற்கு QRO Cert என்ற நிறுவனத்திடம் இருந்து ISO 9001:2015 Certification பெற்றுள்ளார் என
அதை ஊடகங்கள் மூலம் பெருமையாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் முறைகேடு இருக்கிறது!!
வானதி சீனிவாசனுக்கு சான்றிதழ் வழங்கிய QRO Cert நிறுவனத்தின் டெல்லி அலுவலகப் பொறுப்பாளர் Shalu Gupta. இவர் பாஜகவை சேர்ந்தவர். BJP Social Media Conveyer Mandal Paschim Vihar என்ற பொறுப்பில் உள்ளார். Delhi Paschim Vihar பகுதியில் தான் QRO Cert நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது!!, என்று ராஜிவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications