சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழி போட்டி? பக்கா பிளான் ரெடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழி போட்டி?

    சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியிலிருந்து, திமுக வேட்பாளராக அக்கட்சியின், மகளிரணிச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி போட்டியிட உள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

    இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியுடன், திமுக களம் காணப்போவது உறுதியாகிவிட்டது. இரு கட்சிகளுக்கும் நடுவே சில தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து (அதிகாரப்பூர்வம் இல்லாவிட்டாலும்), இப்போதே பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாம்.

    அப்படிப்பட்ட தொகுதிகளில் ஒன்றுதான், தூத்துக்குடி.

    திமுகவிற்கு பலம்

    திமுகவிற்கு பலம்

    தூத்துக்குடி மாவட்டம் திமுகவின் கோட்டைகளில் ஒன்று. இதற்கு அம்மாவட்ட செயலாளராக இருந்த 'முரட்டு பக்தர்' பெரியசாமி முக்கிய காரணம். அவர் மறைந்ததையடுத்து, தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனனும் வடக்கு மாவட்டச் செயலாளராக கீதாஜூவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கனிமொழி விருப்பம்

    கனிமொழி விருப்பம்

    திமுகவின் இந்த கோட்டையில்தான், கொடியேற்ற கனிமொழி விரும்புவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதையே கனிமொழி விரும்புகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள தொகுதி தூத்துக்குடியாகும்.

    கனிமொழி விருப்பம்

    கனிமொழி விருப்பம்

    திமுகவின் இந்த கோட்டையில்தான், கொடியேற்ற கனிமொழி விரும்புவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதையே கனிமொழி விரும்புகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள தொகுதி தூத்துக்குடியாகும்.

    பலமான திமுக அணி

    பலமான திமுக அணி

    இப்போதை நிலைமை வேறு. திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகியவை ஒரே அணியில் உள்ளன. ஜெயலலிதா ஆதரவு அலைவீசிய கடந்த தேர்தலிலேயே இம்மூன்று கட்சிகளும் எவ்வளவு ஓட்டுகளை பெற்றன என்பதை மேலே பார்த்தோம். இப்போது 5 வருட காலமாக அதிமுக எம்பியாக உள்ள ஜெயசிங் மீது இயல்பாக எழுந்துள்ள அதிருப்தி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு போன்றவையும், திமுகவுக்கு தூத்துக்குடியில், வெற்றிவாய்ப்பை மிகவும் பிரகாசமாக்கியுள்ளது.

    நீரு பூத்த நெருப்பு

    நீரு பூத்த நெருப்பு

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, தமிழக காவல்துறை சுட்டதில் 13 பேர் பலியான சம்பவத்தால், ஆளும் அதிமுக அரசு மீது பெரும்பாலான மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தின் அறுவடை பலனை திமுக எளிதாக பெற்றுக்கொள்ளும். ஒருவேளை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அது திமுகவுக்கே பெரும் சாதகமாக மாறும் சூழ்நிலை உள்ளது.

    ஜாதி வாக்குகள்

    ஜாதி வாக்குகள்

    தூத்துக்குடியை கனிமொழி விரும்ப மற்றொரு காரணம், அந்த தொகுதி நாடார் ஜாதி மக்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள தொகுதியாகும். நெல்லை, கன்னியாகுமரியை போலவே, தூத்துக்குடியிலும், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப்போவது நாடார்கள் வாக்குகள்தான். ஏற்கனவே திமுகவின் கோட்டையாக உள்ள தூத்துக்குடியில், இத்தனை சாதகமான அம்சங்களும் இணையும்போது, கனிமொழி களிப்படைய வேறு காரணம் இருக்குமா?

    தூத்துக்குடி மாவட்டம்

    தூத்துக்குடி தொகுதி மக்களிடையே கனிமொழியை பிரபலப்படுத்தும் பணிகளை திமுக தலைமை ஏற்கனவே துவங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 'மக்களிடம் சொல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்' என்ற கோஷத்துடன் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி கலந்துகொள்வார் என்று திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, கடந்த 18ம் தேதி முதல், தூத்துக்குடி மாவட்டத்தில், ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு கனிமொழி பேசிவருகிறார். குறிப்பாக பெண்களிடம் உரையாடுகிறார், அவர்கள் குறைகளை கேட்டறிகிறார். இதனால் கனிமொழி ஏற்கனவே தூத்துக்குடி தொகுதி பெண்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுவிட்டார். எனவே லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில், தூத்துக்குடி தொகுதி பெயருக்கு நேராக கனிமொழி பெயர் இப்போதே டிக் அடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    English summary
    DMK Rajya Sabha MP Kanimozhi likely to contest in Tuticorin as targeting sterlite issue and Nadar vote base, says source in the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X