Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸை விடுங்க.. திமுக கூட்டணியில் இணையும் இன்னொரு பெரிய தலைவர்? ஸ்டாலின் பக்கா ‛ஸ்கெட்ச்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வம் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்துவிட்டார். அந்த வரிசையில் இன்னொரு பாமக நிறுவனர் ராமதாஸையும் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தனித்து களம் காணும் சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசியலுக்கு புதிய வருகையாக உள்ள நடிகர் விஜய்க்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. அதேவேளையில் நடிகர் விஜய் கூட்டணிக்கு அழைத்தும் யாரும் செல்லவில்லை.

dmk-reaches-out-to-ramadoss-after-o-panneerselvam-ahead-of-assembly-election

ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்

இதனால் நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருடைய ஓட்டை பிரிக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே திமுகவும், அதிமுகவும் தங்களின் கூட்டணிகளை முடிந்தவரை பலப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் பிரிக்கும் வாக்குகள் தான் திமுக, அதிமுக வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் என்பதால் ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியமாகும்.

ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு

இதனால் சின்ன கட்சி, சின்ன அமைப்பு என ஒன்று விடாமல் திமுக, அதிமுக கூட்டணி ஆதரவு கோரி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது திமுக கூட்டணி தொடர்ந்து பலமாகி வருகிறது. நேற்றைய தினம் பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக கூட்டணியில் இணைந்தது.

இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன்பிறகு மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏ உசிலம்பட்டி ஐயப்பன் இன்று சட்டசபையிலேயே கூறினர்.

சட்டசபையில் ஆதரவு

அதேபோல் ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த ஓ பன்னீர் செல்வம், ‛‛மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிவர். தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துள்ளது.

மக்கள் மனதில் இருப்பதையே ஐயப்பன் பேசினார்'' என்று கூறினார். இதனால் ஏறக்குறைய ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முயன்று வருகிறது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் மூத்த திமுக தலைவர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது திமுக கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை. ராமதாஸ் தனது முடிவை தெளிவாக கூறவில்லை.

இருப்பினும் கூட திமுக விடுவதாக இல்லை. தொடர்ந்து ராமதாஸிடம் தொடர்பில் உள்ளது. கூட்டணி விஷயத்தில் ராமதாஸ் இறுதி முடிவெடுக்க உள்ளார். தற்போது பாமக இரு அணிகளாக உள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக - பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் அந்த கூட்டணியில் சேர ராமதாஸ் யோசிக்கிறார். இதனால் அவர் தனக்கு செல்வாக்கான தொகுதிகளில் வேட்பாளர்களை தனித்து களமிறக்க பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ராமதாஸை எப்படியாவது திமுகவுக்குள் கொண்டு வர ஸ்டாலின் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். மேலும் ராமதாஸ் வந்தால் வடக்கு மாவட்டங்களில் வன்னியர்களின் ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்று திமுக நினைக்கிறது. இதனால் ராமதாஸூக்காக கூட்டணி கதவை திறந்தே வைத்துள்ளதாம் திமுக.

விசிக ஓகே சொல்லுமா?

இருப்பினும் பாமக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே பிரச்சனை உள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அந்த கட்சி நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர். இதனால் ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணியில் ஐக்கியமாக ஒப்புக்கொண்டால் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக எப்படி சமாளிக்கும்? திருமாவளவனின் கூட்டணி நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+