வடக்கே வாழ்கிறது.. தெற்கே தேய்கிறது.. திமுக போட்டியிடும் தொகுதிகள் லிஸ்டை பாருங்க.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பிற மண்டலங்களை விடவும் தென் மண்டலத்தில் குறைவான தொகுதிகளில் களமிறங்குகிறது. அங்கு பெரும்பாலான தொகுதிகள் கூட்டணிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு பகல் 12.30 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்போதே அதுகுறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, திமுகவின் கோட்டை எனப்படும் சென்னையில், அதிக தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது உதயசூரியன்.

ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை என இந்த பட்டியல் நீள்கிறது.

சென்னை தொகுதிகள்

சென்னை தொகுதிகள்

தியாகராய நகர், மயிலாப்பூர், சோளிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் இப்படியான தொகுதிகளில் களம் காண்கிறது திமுக. அதாவது கிட்டத்தட்ட சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

வடக்கே வாழ்கிறது

வடக்கே வாழ்கிறது

செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், அணைக்கட்டு
கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் என சுற்று வட்டார மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.

குறையும் தொகுதிகள்

குறையும் தொகுதிகள்

அதேநேரம் மதுரைக்கு தெற்கே.. அதாவது தென் மாவட்டங்களில் திமுக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டு செல்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும்தான் திமுக போட்டியிடுகிறது.

தூத்துக்குடி நிலவரம்

தூத்துக்குடி நிலவரம்

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. ஆனால், அங்கு, விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மட்டும்தான் திமுக போட்டியிடுகிறது. வியாபாரிகள் இருவர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளத்தில் கூட திமுக களமிறங்கவில்லை. அங்கு திமுகவுக்கு சமீப காலமாக செல்வாக்கு அதிகரித்திருந்தது.

நெல்லையிலும் குறைவு

நெல்லையிலும் குறைவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தளவில், சங்கரன்கோவில், ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய தொகுதிகளில், திமுக போட்டியிட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட உள்ளது.

மதுரையில் திமுக

மதுரையில் திமுக

அதேநேரம், மதுரையில், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருமங்கலம் என வளைத்து வளைத்து போட்டியிடுகிறது திமுக. தேனியில், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அதிமுகவில் ஓபிஎஸ் போட்டியிட உள்ள, போடிநாயக்கனூர், கம்பம் ஆகியவற்றில் திமுக போட்டியிட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+