சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழ.கருப்பையா உட்பட 7 பேர்தான் ஊடகங்களில் 'இன்டர்வியூ' கொடுக்க முடியும்.. லிஸ்ட் வெளியிட்ட திமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக சார்பில் ஊடகங்களில் விவாதங்கள் தவிர்த்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் லிஸ்ட்

    சென்னை: திமுக சார்பில் ஊடகங்களில் விவாதங்கள் தவிர்த்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இந்த பட்டியலில் உள்ளோரை தவிர்த்து வேறு யாரும் திமுக சார்பில் நேர்காணலில் பங்கேற்க கூடாது என்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    DMK released a list of speakers for media

    உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் க.பொன்முடி எம்எல்ஏ,
    கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி,
    கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா
    கழக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி
    மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ,
    தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி
    சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழ.கருப்பையா.

    DMK released a list of speakers for media

    இவர்கள்தான் நேர்காணல்களில் பேட்டியளிக்க வேண்டும் என்று தலைமைக் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதன்மூலம் தேவையற்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக முயன்றுள்ளது.

    இதில் பழ.கருப்பையா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், 2016, ஜூலை மாதம், திமுக தலைவராக பதவி வகித்த கருணாநிதி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இருப்பினும் பொறுப்பு எதுவும் இதுவரை அவருக்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK has released a list of speakers who are authorized to speak in media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X