விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு
சென்னை: திமுக இன்று 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பெர்மபூர் தொகுதியில் திமுகவே களம் இறங்கியுள்ளது. இடைத்தேர்தல், கடந்த 2021 சட்டசபை தேர்தல் என தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்றுள்ள ஆர்.டி சேகரே இந்த தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இதனால் பெரம்பூர் தொகுதியில் டஃப் பைட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 30 ஆம் தேதியுடன் தொடங்குகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஆளும் திமுக 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

பெரம்பூரில் ஆர்.டி சேகருக்கு வாய்ப்பு
இதில், சென்னையில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில் திமுகவே நேரடியாக களம் இறங்குகிறது. திமுகவில் வேட்பாளாராக ஆர்.டி.சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். பெரம்பூரில் தவெக சார்பில் விஜய் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ள இந்த தொகுதியில் கடும் போட்டியை கொடுக்கும் விதமாக திமுக ஆர்.டி சேகரை களமிறக்கியுள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் இந்த தொகுதியில் இந்த போட்டியிடுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆர்டி சேகர்தான் தற்போது அங்கு எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் 1,05,267 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக பாஜக நேரடி போட்டியில்லை
விஜய் களமிறங்கும் தொகுதி என்பதால் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாற உள்ளது. இந்த தொகுதியில் விஜய்யை எப்படியாவது தோற்கடித்து அவருக்கு பாடம் புகட்ட ஆளும் திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதனாலேயே விஜய்க்கு எதிராக சிட்டிங் எம்.எல்.ஏவான ஆர்டி சேகரையே மீண்டும் களம் இறக்கி இருக்கிறது திமுக.
அதே சமயம் விஜய்யை எதிர்த்து அதிமுகவும் வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை 58 சதவீத தலித் மக்களும், அடித்தட்டு மக்கள் அதிகம் வசித்து வரும் தொகுதியாக இருக்கிறது. களம் இப்படி இருக்கையில் தலித் ஓட்டுக்களே இல்லாத பாமக இங்கு களம் காண்கிறது.
திமுக vs விஜய் நேருக்கு நேர்
அதிமுக பாஜக நேரடியாக விஜய்யை எதிர்த்து போட்டியிடாத சூழலில் திமுக விஜய்யை வீழ்த்த வேண்டும் என்றே கடந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் பெற்ற ஆர்.டி சேகருக்கே மீண்டும் வாய்ப்பினை கொடுத்துள்ளது. அதிக பேன்ஸ், தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதாலும், பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே விஜய் தொண்டர்கள் நடத்திய கருத்துக் கேட்புகளிலும் விஜய் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டதாலே விஜய்யும் அந்த தொகுதியில் களம் இறங்குகிறார். இதனால் திமுக மற்றும் விஜய் இடையே நேரடி போட்டி என்பது ஏற்பட்டுள்ளது. யார் வெற்றி பெறுவார் என்பது வரும் மே 5 ஆம் தேதி தெரிந்துவிடும்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications