சென்னை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. துணை மேயர் போட்டியில் இவரா?
சென்னை: வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், தற்போது திமுக சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி நிலவுகிறது.
இதில் திமுக சார்பில் இதுவரை 11 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 12ஆம் கட்டமாகச் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகள் வாரியாக இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், தற்போது திமுக சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தலைநகரில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 153 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், துணை மேயர் பதவிக்கு மதன்மோகன் மற்றும் நே.சிற்றரசு இடையே போட்டி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக உள்ள சிற்றரசு 110 ஆவது வார்டில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications