நியூஸ் பேப்பரில் பார்த்தா.. தேர்தல் நாள் காலையில்.. பாஜகவிற்கு திமுக வைத்த செக்.. இதை பாருங்களேன்
சென்னை: தமிழ்நாட்டில் சரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் பாஜகவிற்கு எதிராக திமுக தீவிரமான விளம்பரங்களை இன்று வெளியான பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கத்தில் கொடுத்துள்ளது.
வாக்குகளால் விரட்டி அடிப்போம் என்ற தலைப்பில் இந்த விளம்பரங்களை திமுக வெளியிட்டு உள்ளது.

ஒற்றைச் செங்கலாக நிற்கும் மருத்துவமனை
புதிய வரியால் முடங்கிய கோவை, சிவகாசி, திருப்பூர் மற்றும் ஓசூர் போன்ற தொழில் நகரங்கள்
உயர்ந்து கொண்டே இருக்கும் சுங்கச்சாவடி கட்டணங்கள்
மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க மற்றொரு தேர்வுச் சுமை
இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 534 படகுகள் பறிமுதல்
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வராத நிவாரண நிதி
2014 இல் ரூ.440-க்கு விற்ற சமையல் சிலிண்டர் இன்று ரூ.818
பெட்ரோல் விலை
2014 5.66.37
2024 .100.75
டீசல் விலை
2014 . 53.38 2024 . 92.44
2024 . 92.44
மீட்கப்படாத கருப்பு பணம்; வங்கி கணக்கில் வராத பணம்
நாட்டில் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42% பேருக்கு வேலை இல்லை

என்று பாஜகவை விமர்சனம் செய்யும் பாயிண்டுகளை குறிப்பிட்டு பாஜக விளம்பரம் செய்துள்ளது. அதேபோல் அதிமுக + பாஜக இடையில் மறைமுக கூட்டணி இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து திமுக இன்னொரு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் சரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் பாஜகவிற்கு எதிராக திமுக தீவிரமான விளம்பரங்களை இன்று வெளியான பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கத்தில் கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக இதேபோல் விளம்பரம் வெளியிட்டது.

செய்தி போலவே ஒரு மாடலில் திமுகவிற்கு எதிராக அதிமுக விளம்பரம் வெளியிட்டது. விளம்பரம் போன்ற தோற்றம் இல்லாமல் அதிமுக விளம்பரம் செய்தது. ஆனால் இந்த முறை வெளிப்படையாக விளம்பரம் போலவே திமுக விளம்பரம் செய்துள்ளது.
லோக்சபா தேர்தல்: 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமா தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.
மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications