“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி!
சென்னை: தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார்.

அதாவது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்ததாகவும், திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என குறிப்பிட்டிருந்தார். விஜய் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார். அவர் தைரியமான தலைவர் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்,
இந்த நிலையில், திமுக அமைச்சர் ரகுபதி, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, "நடிகர் ரஜினிகாந்த்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. திமுக ரஜினிகாந்தை மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் சொல்லி வருகின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் எங்களது நண்பர். 1996ல் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி திமுக எந்தக் குறையும் சொல்லாது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமையலுக்கு எரிவாயு சிலிண்டரையே கொடுக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றப் போகிறாரா? அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அமெரிக்காவின் அடிமைகளாக நம்மையெல்லாம் வைத்திருக்கிறார். அதுதான் அவர் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை என்று சொல்ல முடியும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சொல்வதை தவிர வேற வேலையே கிடையாது அவங்களுக்கு. சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா பேப்பர்லயும் பாருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன கலாட்டாக்கள் நடக்குது, என்னென்ன பிரச்சனைகள் நடக்குது, என்ன அடிதடி சண்டைகள் நடக்குது, என்ன கலவரங்கள் நடக்குது என்பதெல்லாம் தினசரி பேப்பர்கள்ல வருகிறது. தமிழ்நாட்டுல அதில் ஒரு பங்கு வந்தா பெரிய விஷயம். எனவே தமிழ்நாட்டில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது.
என்டிஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். எங்களுக்கு பயமில்லை நாங்கள் ஜில்லென்று இருக்கிறோம். 2026 இல் நாங்கள்தான் வெற்றியடைய போகிறோம் அது தெரிந்துவிட்டது. அது அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
தொகுதி உடன்பாட்டை கூட அவர்களால் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். என்டிஏ கூட்டணியில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் இன்றைய திமுக கூட்டணியை தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேருகிறாரா என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம் அது எங்களுக்கு தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்!












Click it and Unblock the Notifications