மீண்டும் திமுக ஆட்சி.. மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்! கிட்ட கூட வராத விஜய்.. புது கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகின்றது என்பதை பலரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இன்சைடு எலெக்ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், 159 முதல் 165 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் யார் என்ற ரேஸிலும் ஸ்டாலினுக்கே அதிக வாக்கு சதவீதம் விழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் என பலரும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இன்சைடு எலெக்ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என கணித்துள்ளது. குறிப்பாக 44 சதவீத வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெறும் என்றும், தொகுதிகளை பொறுத்தவரை 159 முதல் 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
எத்தனை இடங்களில் வெற்றி பெறும்
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 33 சதவீத வாக்குகள் பெற்று 64 முதல் 70 இடங்களைப் பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று புதிதாக வந்துள்ள விஜய்யின் தவெக 18 சதவீத வாக்குகள் பெறும் எனவும், தொகுதிகளை பொறுத்தவரை 4 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளை பெறும் என கணித்துள்ளது.
முதல்வர் யார் என்ற விருப்பத் தேர்வில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கே 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய்க்கு 24 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
எத்தனை இடங்கள்?
திமுக கூட்டணி - 159 முதல் 165
அதிமுக கூட்டணி - 64 முதல் 70
தவெக - 4 முதல் 6
நாம் தமிழர் கட்சி - 0
பிற கட்சிகள் - 0
முதல்வர் வேட்பாளர்களில் யார்
மு.க ஸ்டாலின் - 44 சதவீதம்
எடப்பாடி பழனிசாமி - 28 சதவீதம்
விஜய் - 24 சதவீதம்












Click it and Unblock the Notifications