Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ 8000 கூப்பன்கள் எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இல்லத்தரசிகளுக்கான இந்த திட்டத்தின் மூலம் டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை பயனாளிகள் வாங்கிக் கொள்ளலாம்.
2026 சட்டசபைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பெண்களைக் கவரும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான திட்டம் தான் இந்த "இல்லத்தரசி கூப்பன்" (Illatharasi Coupon Scheme).

இந்தத் திட்டம் குறித்து இதுவரை வெளியாகியுள்ள விரிவான தகவல்களை பார்க்கலாம். வீட்டில் உள்ள பழைய மின்சாதனப் பொருட்களை (Electronic Appliances) மாற்ற நினைக்கும் அல்லது புதிய பொருட்கள் வாங்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு நிதி உதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனைத் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்" மற்றும் "கதாநாயகி" என்று வர்ணித்துள்ளார்.
யாருக்குக் கிடைக்கும்? (தகுதிகள்)
வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்.
இந்த கூப்பனைப் பயன்படுத்தி மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் (Fridge), டிவி (LED TV), மைக்ரோவேவ் அவன் (Oven), இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
எங்கே வாங்கலாம்?: உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இந்தக் கூப்பனைப் பயன்படுத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கூப்பன் எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது நடைமுறைக்கு வரும்போது, ரேஷன் கடைகள் (FPS) மூலமாகவோ அல்லது பிரத்யேகமான அரசு முகாம்கள் மூலமாகவோ வழங்கப்பட வாய்ப்புள்ளது (மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது போல).
அதாவது மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பங்கள் கொடுத்தார்களோ அது போல் ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு விண்ணப்பங்களை கொடுத்து அதில் வருமான வரி செலுத்தாத மகளிர்களுக்கு டோக்கன் கொடுத்து பொங்கல் பரிசு வாங்கிக் கொள்வது போல் ஒரு தேதியை குறிப்பிட்டு ரேஷன் கடைகளில் கூப்பனை வாங்கிக் கொள்ள சொல்லலாம்.
இல்லாவிட்டால் முகாம்களை நடத்தி தகுதியுள்ள பயனாளிகளுக்கு அங்கேயே ரூ 8000 கூப்பனை வழங்கலாம். எனவே இது எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரியும்.
மற்ற முக்கிய அறிவிப்புகள் (பெண்களுக்காக)
இந்த ₹8,000 கூப்பன் திட்டத்துடன் சேர்த்து வேறு சில முக்கிய வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன:
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: தற்போது வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத் தொகை, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
கல்வி உதவித்தொகை: 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
காப்பீடு: முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
இது எப்போது அமலுக்கு வரும்?
இது ஒரு தேர்தல் வாக்குறுதி மட்டுமே. அதாவது, 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னரே விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூப்பன் விநியோகம் குறித்த அரசாணை வெளியாகும்.
பழைய துருப்பிடித்த அல்லது பழுதான வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றிவிட்டுப் புதிய பொருட்களை வாங்க இல்லத்தரசிகளுக்குக் கிடைக்கப்போகும் ஒரு 'கிஃப்ட் வவுச்சர்' (Gift Voucher) போல இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications