இன்னுமா என்ன தெரியல! 2026.. ஸ்டாலின் கையில் ப்ளான்-பி! அதிமுகவுக்கு தான் ஸ்கெட்சே! குஷியில் கூட்டணி!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் மிக தீவிரமாக எதிர்நோக்கி வருகிறது திமுக. கடந்த தேர்தலில் அதிமுக 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அதனை பாதியாக குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்த தொகுதிகளில் திமுகவே களமிறங்க இருப்பதாகவும், திமுக வென்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக மீண்டும் எழுந்து நிற்கும் வாய்ப்பையே தொடக்கத்திலேயே முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், திமுக தலைமை ஒரு புதிய அதிரடி வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் வலுவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 66 தொகுதிகளையும் விரிவாக ஆய்வு செய்த திமுக, இந்த முறை அந்த எண்ணிக்கையை 30-க்குள் தள்ளிவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 தேர்தல்
2021-ல் அதிமுக ஆதிக்கம் செலுத்திய 66 தொகுதிகளில், திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட பல பகுதிகளில் தோல்வி ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது ஆறு தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் இரண்டில் வென்றாலும், மீதமுள்ள எட்டு இடங்களில் அதிமுக வேட்பாளர்களே கைப்பற்றினர். அதேபோல், விசிக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் நான்கு மட்டுமே வெற்றி கிடைக்க, இரண்டு தொகுதிகள் அதிமுகவுக்கே திரும்பின.
திமுக வியூகம்
மேலும், காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட ஆறு தொகுதிகளிலும் கட்சி தோல்வியைப் பதிவு செய்ததால், அந்த ஆறு இடங்களையும் அதிமுக சுலபமாகக் கைப்பற்றியது நினைவிருக்கலாம். இந்நிலையில், இந்த தரவுகளை வைத்து, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் வெற்றி வாய்ப்பு குறைகிறது என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக, 2026-ல் புதிய வியூகம் தயாராகிறது. குறிப்பாக, கடந்த முறை கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்த முக்கியமான தொகுதிகளில் இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கூட்டணி கட்சிகள்
இதற்கிடையில், தொகுதி பங்கீட்டில் கூட திமுக தீர்மானமான அணுகுமுறையைப் பின்பற்றப் போகுறது என்கிறார்கள். காங்கிரஸுக்கு வரும் 2026 தேர்தலில் 20 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனவும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 40 தொகுதிகளுக்குள் போட்டியிட வைக்கப்படும் எனவும் அங்கிருந்து வரும்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் விசிகவுக்கு மட்டும் கடந்த முறை வழங்கப்பட்டதை விட இரண்டு தொகுதிகள் கூடுதலாக தரும் எண்ணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக இலக்கு
ஆனால், அதே சமயம் கூட்டணி கட்சிகளுக்கு தேவையற்ற அளவு அதிக தொகுதிகள் கொடுக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது திமுக தலைமை. மேலும், மதிமுக, இதர சிறு கட்சிகளை 2021 போலவே திமுக சின்னமான 'உதயசூரியனில்' போட்டியிட வைப்பது போன்ற திட்டங்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவின் வாக்கு சிதறலை தடுக்கவும், சிறு கட்சிகளின் நிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என கருதப்படுகிறது. மொத்தத்தில், அதிமுகவை இந்த முறை 30 தொகுதிகளுக்குள் சுருக்க வேண்டும் என்பது தான் இந்த வியூகத்தின் அடிப்படை என்கின்றனர் திமுகவினர்.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு!












Click it and Unblock the Notifications