4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்!
சென்னை: திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை வெளியாகிவிட்டது. 'கலர் கலர்' வாக்குறுதிகளுக்கு நடுவே, தமிழகத்தின் நிலப்பரப்பை நான்கு திசைகளாகப் வகுத்து, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் களைய ரூ. 20,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்புதான் இப்போதைய 'ஹாட் டாக்'.
"தேர்தல் அறிக்கைதான் எங்க பார்ட்டியோட ஹீரோ" - இது கருணாநிதி காலத்து டயலாக். "இந்தத் தடவை இது சூப்பர் ஸ்டார்" என அப்டேட் செய்திருக்கிறார் ஸ்டாலின். வெறும் இலவசங்களை மட்டும் நம்பாமல், தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு 'ஸ்பெஷல் ரூட் மேப்' போட்டிருப்பதுதான் இந்த அறிக்கையின் ஹைலைட். அதாவது சென்னையில் மட்டும் திட்டங்கள் குவியாமல் மற்ற இடங்களுக்கு திட்டங்கள் செல்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழ்நாட்டை 4 பாகங்களாக வகுத்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க உள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சியைச் சமச்சீராக மாற்ற, திமுக கையில் எடுத்திருக்கும் அந்த 4 பிராந்திய பிளான்கள் இதோ:
1. மத்திய மண்டலம்: திருச்சிதான் இனி 'கெத்து'!
டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களை ஒருங்கிணைக்க திருச்சியை மையப்புள்ளியாக மாற்றியிருக்கிறார்கள்.
எக்ஸ்பிரஸ் வே: திருச்சிக்கு மகுடம் சூட்டும் வகையில் புதிய விரைவுச் சாலைகள்.
கடலூர் போர்ட்: கடலூர் துறைமுகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தி, வர்த்தகத்தை முடுக்குவது.
டெல்டா ஸ்பெஷல்: விவசாயம் மட்டும் போதாது என, டெல்டா பகுதிகளில் 'வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை' (Agro-based industries) உருவாக்கி வேலைவாய்ப்பை அள்ளத் திட்டம்.
2. தெற்கு மண்டலம்: தூத்துக்குடி டூ குமரி... சீறிப்பாயும் கப்பல்கள்!
தென்னகத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த 'கடலோரப் பொருளாதாரப் பாதையை' (Coastal focus) கையில் எடுத்திருக்கிறார்கள்.
தூத்துக்குடி - நெல்லை: இந்த இரண்டு நகரங்களையும் இணைத்து ஒரு பிரம்மாண்ட தொழில் காரிடார்.
கப்பல் கட்டும் தளம்: கன்னியாகுமரியில் 'ஷிப் பில்டிங்' (Shipbuilding) மற்றும் சுற்றுலாவுக்கு (Tourism) அதீத முக்கியத்துவம். தெற்கே இனி வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்கிறது அறிக்கை.
3. வடக்கு மண்டலம்: சென்னையின் நீட்சியாக ராணிப்பேட்டை!
வடக்கு மாவட்டங்கள் என்றாலே ஐடி, ஆட்டோமொபைல்தான். அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள்.
எக்ஸ்டெண்டட் சென்னை: சென்னையின் தொழிற்சாலை பெல்ட்டை ராணிப்பேட்டை வரை நீட்டித்து, அதை ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹப்பாக மாற்றுவதுதான் இலக்கு.
ஃபியூச்சர் டெக்: இவி (EV), ஐடி (IT), ஜிசிசி (GCC) மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் வட தமிழகத்தைப் பிசியாக வைத்திருக்கப் போகிறார்கள்.
4. மேற்கு மண்டலம்: 'கொங்கு'க்கு கோடிகள் மழை!
மேற்கு மண்டலத்தின் தொழில் முனைவோரைத் திருப்திப்படுத்த, அந்தப் பிராந்தியத்திற்கு மட்டும் ரூ. 2,000 கோடி மதிப்பில் தனி 'தொழில் வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸ்டைல் & டிபென்ஸ்: ஜவுளித் துறை மட்டுமன்றி, ராணுவ தளவாட உதிரிபாகங்கள் (Defence components), இவி (EV) மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் மேற்கு மண்டலம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
வெறும் 'மகளிர் உரிமைத் தொகை 2000' என்ற கவர்ச்சி அறிவிப்புகளுக்குப் பின்னால், தமிழகத்தின் ஒவ்வொரு இன்ச் நிலத்தையும் தொழில்மயமாக்கும் இந்தத் தொலைநோக்குத் திட்டங்கள் காகிதத்தில் 'கெத்து' காட்டுகின்றன. களத்தில் ஜெயிக்குமா? மக்கள் தீர்ப்பில் தெரியும்!












Click it and Unblock the Notifications