Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.. வைகோ விடுதலை.. எம்.பி பதவிக்கு ஆபத்து இல்லை!

மதிமுக எம்பி வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வைகோ மீது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்- வீடியோ

    சென்னை: திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    திமுக மதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையே நிறைய பிரச்சனை நிலவி வந்த சமயம் அது. மதிமுகவினர் பலர் வரிசையாக திமுகவில் இணைந்து கொண்டு இருந்தனர். இதனால் கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பினார்.

    DMKs defamation case against Vaiko: Chennai Special court will give its verdict

    அதில் மதிமுக கட்சியை திமுக உடைக்க பார்க்கிறது. மதிமுகவினருக்கு பணம் கொடுத்து கருணாநிதி எங்கள் தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கிறார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

    இதனால் 2006ல் திமுக சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.வைகோவிற்கு திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. அவதூறு வழக்கு கடந்த 13 வருடங்களாக எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

    சென்ற வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வைகோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தீர்ப்பு தேதி இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கியது.

    இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பரப்புதல் சட்டப்பிரிவு, 499 மற்றும் 500 கீழ் இரண்டு வருடம் வரை அதிகமாக தண்டனை வழங்க முடியும். இதனால் இந்த வழக்கில் இன்று வைகோவிற்கு இரண்டு வருடம் தண்டனை கிடைத்தால் அவரின் ராஜ்ய சபா எம்பி பதவி பறிபோக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

    ஆனால் திமுக தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி வைகோவை விடுதலை செய்தது, சிறப்பு நீதிமன்றம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+