இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்
சென்னை: இல்லத்தரசி கூப்பன் திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள டீலர்கள் பலருக்கும் கூட பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"அண்ணே.. அந்த 8000 ரூபாய் கூப்பனை வச்சு பொருள் வாங்கணும்னா டவுனுக்குத்தான் போகணுமா?" - இதுதான் இப்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கும் கேள்வி.

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் 'ஹீரோயின்' ஆக ஜொலிக்கும் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல்களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்' என முதல்வர் அறிவித்திருந்தார்.
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம்
திமுக-வின் 'சூப்பர் ஸ்டார்' அறிவிப்பான 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், வெறும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கானது மட்டுமல்ல; அது கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சிறு மின்சாதனக் கடைக்கும் உயிர் கொடுக்கப்போகும் திட்டம் என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.
டவுனுக்குப் போக வேண்டாம்!
பொதுவாக, இதுபோன்ற பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், "பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம்" என்ற ஒரு பேச்சு ஓடும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பிலேயே "அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம்" என ஒரு 'க்ளூ' கொடுத்திருந்தார்.
இதன் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான் இதுதான்: கிராமப்புறங்களில் உள்ள சிறிய எலக்ட்ரானிக்ஸ் கடைகளும், இந்தத் திட்டத்தின் கீழ் 'அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களாக' (Empaneled Vendors) பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம்.
சிறு டீலர்களுக்குப் 'பம்பர் ஆஃபர்'!
அரசு வட்டாரங்கள் கசியவிடும் தகவலின்படி:
கிராமப்புறங்களில் இயங்கும் சிறு டீலர்கள், அரசின் பிரத்யேக போர்ட்டலில் பதிவு செய்துகொள்ளலாம்.
அவர்களிடம் கூப்பன் கொடுத்து பொருள் வாங்கும் பெண்களுக்கு, அரசு நேரடியாக அந்த டீலரின் வங்கிக் கணக்கிற்கே பணத்தைப் பட்டுவாடா செய்யும்.
இதன் மூலம் கிராமத்து இல்லத்தரசிகள் ஒரு மிக்ஸி வாங்கவோ, பழைய டிவியை மாற்றவோ 30 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நகரத்திற்கு அலைய வேண்டிய அவசியமிருக்காது.
எம்.எஸ்.எம்.இ (MSME) துறைக்கு ஒரு 'புஷ்'!
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சமீபத்தில் குறிப்பிட்டது போல, இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும், சிறு குறு தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய தெம்பைக் கொடுக்கும். ஒரு கிராமத்தில் இருக்கும் கடைக்காரர், இந்தத் திட்டத்தின் மூலம் 100 வாடிக்கையாளர்களைப் பிடித்தால் கூட, அந்தச் சிறு வணிகரின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும்.
மக்களின் மைண்ட் வாய்ஸ்!
"பணத்தைக் கையில் கொடுத்தால் அது வீட்டுச் செலவிலோ அல்லது வேறு எதிலாவது கரைந்துவிடும். ஆனால், இப்படி கூப்பனாகக் கொடுத்து, அதுவும் பக்கத்து ஊர்க் கடையிலேயே வாங்கலாம் என்று சொன்னால், நிஜமாகவே இது பெண்களுக்குக் கிடைத்த கௌரவம் தான்" என்கிறார் ஒரு கிராமத்துத் தாய்.
பெரிய கார்ப்பரேட் டீலர்களுக்கு இணையாக, ஊர் ஓரத்தில் கடை வைத்திருக்கும் 'செல்வம் எலக்ட்ரானிக்ஸ்' போன்ற சிறு கடைகளுக்கும் அரசு அங்கீகாரம் வழங்கப்போவதுதான் இந்தத் திட்டத்தின் 'கிளைமாக்ஸ்' ட்விஸ்ட்!
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications