'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்!
சென்னை: 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் அதில் பெரும்பாலும் QR கோடு வைத்து வழங்கப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக-வின் தேர்தல் அறிக்கையில் 'ஹீரோயின்' ஆக ஜொலிக்கும் 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம், இப்போது தமிழகத் தேர்தல்களத்தின் ஹாட் டாபிக். ஒரு முறை வழங்கப்படும் இந்த 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பனை வைத்து, 'வீட்டு உபயோகப் பொருட்களை (Electronic Appliances) வாங்கிக் கொள்ளலாம்' என முதல்வர் அறிவித்திருந்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது எப்படி வழங்கப்படும் என்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாம்.

அதன்படி,
1. இந்த கூப்பன்களில் QR கோடு இருக்கும்.
2. இந்த QR கோடு-ல் குடும்ப தலைவியின் பெயர் அல்லது வீட்டில் முதிர்ந்த பெண்ணின் பெயர் இருக்கும்.
3. அவரின் ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு விவரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
4. அதை ஸ்கேன் செய்து மட்டுமே பொருளை வாங்க முடியும். அதற்கு ஓடிபி வரும்.. அதை கொடுக்க வேண்டும்.
5. இதனால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.
6. அதேபோல் போலி கூப்பன் உருவாக்க முடியாது.
7. மேலும் உங்கள் கூப்பனை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்றவை ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது
எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால், "இந்த கூப்பனை எங்கே கொடுப்பார்கள்? ரேஷன் கடையிலா அல்லது பணமாகவா?" எனப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தன. இதோ, தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்த சில சுவாரஸ்யமான எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்:
நேரடி டீலர்ஷிப்... அங்கீகரிக்கப்பட்ட கடைகள்!
அரசு வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, அரசு வழங்கும் பொருட்களை வாங்க வேண்டியது இல்லை, தனியார் டீலர்களிடம் வாங்கலாம். இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தி தமிழகத்தின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் டீலர்ஷிப்களில் (Major Dealerships) பொருட்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாம்.
அதாவது, அரசு ஒரு 'அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலை' (Approved Dealership List) வெளியிடும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இந்தக் கூப்பனைப் பணத்திற்குப் பதில் கொடுத்து, உங்களுக்குத் தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி அல்லது இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றைத் தள்ளுபடி விலையில் அல்லது முழுமையாக வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் இந்த கூப்பனை அரசிடம் கொடுத்து refund பெற்றுக்கொள்வார்கள்.
ஏன் இந்த நேரடி முறை?
கடந்த காலங்களில் இலவசமாகப் பொருட்களைக் கொடுத்தபோது, அவை தரமற்றதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஆனால், இப்போது:
மக்களின் விருப்பம்: மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வெளிப்படைத்தன்மை: அரசு நேரடியாக டீலர்களுக்குப் பணத்தை வழங்குவதால், ஊழல் புகார்களுக்கு இடம் இருக்காது.
பொருளாதார சுழற்சி: இதன் மூலம் உள்ளூர் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் வியாபாரம் பெருகும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை?
வருமான வரி செலுத்தாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பட்டியல் எப்போது வரும்?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சி அமைந்தால் மாவட்ட வாரியாக எந்தெந்தக் கடைகளில் இந்தக் கூப்பனைப் பயன்படுத்தலாம் என்ற பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமாம்.
அதிமுக-வின் 'இலவச பிரிட்ஜ்' அறிவிப்புக்குத் பதிலடியாக, "உங்களுக்குப் பிடித்தப் பொருளை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள்" என திமுக வீசியிருக்கும் இந்த 'இல்லத்தரசி' கூப்பன் அஸ்திரம், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
பாஜக இருக்கும் வரை.. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது.. ஓபனாக சொன்ன கார்த்தி சிதம்பரம்!












Click it and Unblock the Notifications