2026ல் தட்டுத் தடுமாறும் திமுக.. சரியும் ஸ்டாலினின் செல்வாக்கு! ’சாணக்யா’ பாண்டே சொல்லும் கணிப்பு!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இப்போதைக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு ஆதரவு? என பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் கடந்த தேர்தலை விட 2026 தேர்தலில் ஸ்டாலின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. குறிப்பாக திமுக ஏற்கனவே அதன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளோடு சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் ஏப்ரல் மே மாதம் இடையிலான காலத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில் திமுகவுக்கு எதிர்ப்பு அலையே நிலவுவதாகவும், தமிழகத்தில் அதன் தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கு சரிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரங்கராஜ் பாண்டே வெளியிட்டு இருக்கும் வீடியோவில்,"ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரை இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுக்க யார் தலையீடும் இல்லாமல் அதாவது எந்த விதமான ஏஜென்சி உள்ளிட்டோரின் தலையீடும் இல்லாமல் முழுக்க முழுக்க சாணக்யா மூலமே இந்த கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 3065 வாக்காளர்கள் இதில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மொத்தம் 4 பகுதிகளாக தொகுதிகள் பிரிக்கப்பட்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. முதல் பகுதியில், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் தெற்கு, ஓசூர்,ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளும், இரண்டாவது பகுதியில் மதுரை மேற்கு, நாகப்பட்டினம், பெரம்பூர், புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், திருமங்கலம், சேலம் வடக்கு, சேலம் மேற்கு, செங்கம், சிவகங்கை ஆகிய தொகுதிகளாக பிரித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.
முதலில் மத்திய பாஜக ஆட்சி எப்படி என்ற கேள்விக்கு மோசம் என 32 சதவீதமும், சூப்பர் என 35 சதவீதமும் பரவாயில்லை என 35 சதவீதம் பெறும் தெரிவித்திருக்கின்றனர். மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா என்ற கேள்விக்கு 20 சதவீதம் பேர் தெரியவில்லை எனவும், இல்லை என 34 சதவீதம் பேரும், ஆம் என 46 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் செயல்பாடுகளை பொருத்தவரை சூப்பர் என 23 சதவீதம் பேரும், பரவாயில்லை என 36 சதவீதம் பேரும், மோசம் என 41% பெரும் தெரிவித்து இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு சூப்பர் என 27 சதவீதம் பேரும், பரவாயில்லை என 35 சதவீதம் பேரும், மோசம் என 38 சதவீதம் பெறும் தெரிவித்து இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு சூப்பர் என 17 சதவீதம் பேரும், பரவாயில்லை என 30 சதவீதம் பேரும் மோசம் என 53 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கின்றனர்.
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 100% நிறைவேற்றியுள்ளது என 16 சதவீதம் பேரும், ஒன்றுமே செய்யவில்லை என 32 சதவீதம் பேரும், ஓரளவு என 52 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழலே இல்லை என 16 சதவீதம் பேரும், ஓரளவு தான் என 31 சதவீதம் பேரும், அதிகரித்துள்ளது என 53 சதவீதம் பெரும் தெரிவித்து இருக்கின்றனர். திமுக அமைச்சர்கள் மீதான ஈடி, ஐடி நடவடிக்கைகள் குறித்து தெரியவில்லை என 21 சதவீதம் பேரும், அரசியல் பழிவாங்கல் என 32 சதவீதம் பேரும், சரியான நடவடிக்கை என 47 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். துணை முதல்வர் உதயநிதியின் செயல்பாடு சூப்பர் என 22 சதவீதம் பேரும், பரவாயில்லை என 33 சதவீதம் பேரும், மோசம் என 45 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இதன் மூலம் திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது செல்வாக்கு சரிந்து இருப்பதாக சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்!












Click it and Unblock the Notifications