போரூர் மெட்ரோ.. காசு தராத மோடி! இன்று விஜய்யுடன் போஸ் தருகிறார்! விட்டு விளாசிய திமுக ராஜீவ் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பூந்தமல்லி வடபழனி இடையிலான வழித்தடத்தைத் தொடங்கி வைத்தார். அவருடன் தமிழக முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், இதே திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராத நிலையில், நிதிச்சுமையை ஏற்று திட்டத்தைத் தொடர்ந்தது திமுக அரசு என கூறியுள்ளார் திமுகவின் ராஜீவ் காந்தி.

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

Rajiv Gandhi

தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான வழித்தடத்தைத் தொடங்கி வைத்தார். சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்காக போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை பயணம் செய்து மீண்டும் திரும்பினார். இந்த ரயிலில் பிரதமருடன் முதலமைச்சர் விஜயும் பங்கேற்றார்.

இந்நிலையில், இதே திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராத நிலையில், நிதிச்சுமையை ஏற்று திட்டத்தைத் தொடர்ந்தது திமுக அரசு என கூறியுள்ளார் திமுகவின் ராஜீவ் காந்தி.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இன்று திறக்கபட இருக்கும் மெட்ரோ ரயிலுக்கு நிதி தர மறுத்த மோடி; அதே மெட்ரோவைத் திறந்து வைக்கிறார்! அருகில் நின்று போஸ் கொடுக்கிறார் விஜய்! அரசியல் விளம்பரத்துக்கும், அரசியல் உழைப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மோடி அரசு பணம் கொடுக்க மறுத்த போது ஒன்றிய அரசின் நிதியைக் கோரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடியவர் எங்கள் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள்!!

ஒன்றிய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாத சூழலிலும், மாநில அரசின் சொந்த நிதியில் திட்டத்தை முன்னெடுத்தது திமுக அரசு! நிதி தர மறுத்தது பாஜக அரசு; நிதிச்சுமையை ஏற்று திட்டத்தைத் தொடர்ந்தது திமுக அரசு! ஆனால் இன்று திறப்பு விழாவில் பிரதமர் மோடி! அவருக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க விஜய்! அன்று மாநிலத்தின் உரிமைக்காகப் போராடிய எங்களை விமர்சித்தவர்கள், இன்று அந்தப் போராட்டத்தின் பலனைப் பறைசாற்றும் விழாவில் பங்கேற்கிறார்கள்!

விஜய் அவர்களே, அருகில் நிற்பதால் வரலாற்றில் இடம் கிடைத்துவிடாது! புகைப்படத்தில் இடம்பிடிப்பது எளிது; ஒரு திட்டத்துக்காக நிதி கேட்டு, உரிமைக்காகப் போராடி, சொந்த நிதியில் பணியை முன்னெடுப்பதற்குத்தான் அரசியல் துணிச்சல் வேண்டும்! மெட்ரோ ரயிலின் திறப்பு விழாவில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம்; ஆனால் அதன் பின்னால் நடந்த போராட்டத்தையும் உழைப்பையும் சொந்தம் கொண்டாட முடியாது!

மெட்ரோ திட்டத்தை முன்னெடுத்தது திமுக அரசு! நிதிக்காகப் போராடியவர் மு.க. ஸ்டாலின்! விழா மேடையில் மோடி இருக்கலாம்; புகைப்படத்தில் விஜய் இருக்கலாம்; ஆனால் இந்தத் திட்டத்தின் பின்னால் தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடிய திமுகவின் உழைப்பு இருக்கிறது! வரலாறு புகைப்படத்தைக் கணக்கில் வைக்காது; யார் உழைத்தார்கள், யார் உரிமைக்காகப் போராடினார்கள் என்பதைத்தான் கணக்கில் வைக்கும்!" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+