ஜெய் ஸ்ரீராம்..ஆர்என் ரவி இன்னும் திருந்தல! வாய்க்கொழுப்பெடுத்து பேச்சு.. திமுக ராஜீவ் காந்தி சுளீர்
சென்னை: மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் போட வைத்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் மாணவர்களிடையே மத வெறுப்பை ஆளுநர் திணிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி.
மதுரையில் புகழ்பெற்ற தியாகராஜர் கல்லூரியில் கல்வி கூட்டமைப்புகளின் கம்பர் என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார்.

மாணவர்களிடையே பேசிய அவர் திடீரென ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை எழுப்பினார். நான் சொல்கிறேன் நீங்களும் திரும்பச் சொல்லுங்கள் என சொல்லி மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் என முழக்கம் இட வைத்துள்ளார். பல சமூக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் போட வைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநரின் செயல் மாணவர்களிடையே மத வெறுப்பை தூண்டுவது போல் இருப்பதாக கூறியுள்ளார் திமுக மாணவரணி செயலாளரான ராஜீவ் காந்தி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டின் கல்விச்சூழலைச் சிதைக்க நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அதற்கு களம் அமைத்துக்கொடுத்த கல்லூரிக்கும் கண்டனம்
தமிழ்நாட்டு மாணவர்களிடையே மத வெறுப்பைத் திணித்து, இங்கே இருக்கும் ஆரோக்கியமான கல்விச்சூழலைக் காவுவாங்கும் நாசகர வேலையில் இறங்கியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு தியாகராசர் பொறியியல் கல்லூரியும் துணைபோயிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாந்தி எடுப்பதற்கும் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியதவாராக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கடந்த சில ஆண்டுகளாகவே வாயில் வந்ததையெல்லாம் சகட்டுமேனிக்குப் பேசிவரும் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து கிடப்பில் போட்டதோடு, 'நான் கிடப்பில் போட்டால் அந்த மசோதா செத்துவிட்டதாக அர்த்தம்' என்றெல்லாம் வாய்க்கொழுப்பெடுத்துப் பேசினார். அதற்கான தக்க பதிலை நீதிமன்றத்திடமிருந்தும் வாங்கிக்கட்டிக்கொண்டும் இன்னும் அவர் திருந்தவில்லை.
அரசு உதவிபெறும் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஆளுநர் ஆ.என்.ரவி பங்கேற்ற கம்பர் 2025 விழா' 12.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி விடுமுறை நாளான அன்று எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென கல்லூரி முதல்வர் வாயிலாக அந்த நிகழ்ச்சிக்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், துறைக்கு 60 மாணவர்கள் என்று 9 துறைகளிலிருந்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் 45 ஆசிரியர்களும் துறைத் தலைவர்களுமாக மொத்தம் 600க்கும் மொத்தம் 600க்கும் மேற்பட்டோரை, கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது, 6 மணிக்குத் தொடங்குகிற நிகழ்ச்சிக்காக, பிற்பகல் 2 மணிக்கே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அரங்கில் கொண்டுவந்து அடைத்ததோடு, கிட்டத்தட்ட 4 மணி நேரம் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்காமல், இயற்கை உபாதைகளுக்குக்கூட வெளியே செல்ல அனுமதிக்காமல், அடைத்துவைத்து அந்த அரங்கை வதைமுகாமைப்போல மாற்றிவைத்திருந்திருக்கிறார்கள். ஆர்.என்.ரவி என்ற தனிமனிதருக்காக, மாணவர்களையும் ஆசிரியர்களையும் சக உயிர்களாகக்கூட மதிக்காமல், ஆளுநரின் ஏவல் ஆளாக நடந்துகொண்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சம் வைத்ததுபோல் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவியோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசியதோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிராக வகுப்பு வாதத்தைத் துண்டும் விதமாகவும் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலும் சனாதனத்தை வலியுறுத்தியும் அங்கே இருந்தவர்கள் அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் வெறுப்பைக் கக்கியிருக்கிறார். கூடவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் போடவைத்து அநாகரிமாக நடந்துகொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நிலவும் ஆரோக்கியமான கல்விச்சூழலைச் சிதைக்கும் வகையில் மாணவர்களிடையே பேசியிருக்கிறார் ஆர்.என்.ரவி. அதற்கு மேடைஅமைத்துக்கொடுத்திருக்கிறது தியாகராசர் கல்லூரி நிர்வாகம். தியாகராசர் கல்லூரி நிர்வாகம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சமீபத்தில்தான் அரசியல் சாசனத்தை மதிக்காமல் நடந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின் புத்திக்கு உரைக்கும் வகையில் பாடம் எடுத்தது உச்ச நீதிமன்றம். அதிலிருந்து அவர் கொஞ்சமும் பாடம் கற்கவில்லை என்பது புரிகிறது. விரைவில் புரியும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள். ஆளுநரின் இந்த அநாகரீகமான அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என கூறியுள்ளார்.
-
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications