வைகோவிற்கு நன்றி.. நீங்கள்தான் எங்கள் போர்வாள்.. மதிமுகவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்.. உருக்கம்!
மதிமுக, திமுக இடையிலான உறவு மிகவும் நெருக்கமாகி உள்ளது சந்தோசம் அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: மதிமுக, திமுக இடையிலான உறவு மிகவும் நெருக்கமாகி உள்ளது சந்தோசம் அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் மறைந்த தலைவர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டனர்.

என்ன உறவு
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் மதிமுகவுடன் திமுகவிற்கு உள்ள உறவு குறித்து பேசினார். அதில், நானும் அண்ணன் வைகோவும் பல மேடைகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். தேர்தல் கூட்டம், திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறோம்.

ஏன் நெருக்கம்
ஆனால் இந்த மாநாடு என் மனதிற்கு நெருக்கமானது. இந்த மாநாடு சிறப்பானது. ஏனென்றால் நான் கலந்து கொள்ளும் முதல் மதிமுக கட்சி மாநாடு, இந்த மாநாடு. பொது மேடைகளில் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் இதுதான் முதல் மதிமுக மாநாடு.

உறவு எப்படி
திமுக - மதிமுக உறவு மிகவும் நெருக்கமாகி உள்ளது. நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம். தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் எல்லாம் ஒரே தாயின் மகன்கள். அறிஞர் அண்ணாதான் நம்மை இணைத்து வருகிறார். தமிழர்களை இணைக்கும் சக்தி அண்ணா.

என்ன பிரிவு
பிரிந்திருந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் சொற்கள் தமிழ், தமிழர், திராவிடம், அண்ணா, கருணாநிதி ஆகியவை ஆகும். திமுகவில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ. திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி.

மகிழ்ச்சி
அதனால்தான் மதிமுக மேடையில் ஸ்டாலின் நிற்கிறான். இது பலருக்கு ஆச்சர்யமாக, பொறாமையாக இருக்கலாம். ஆனால் எங்கள் உறவு இப்படித்தான். இதுதான் கருணாநிதி, அண்ணா அவர்களின் கனவு. திமுகவிற்கு பக்க துணையாக வைகோ இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications