ரூ.200 கோடி சம்பளம் திமுக போட்ட பிச்சை.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த ஆர்எஸ் பாரதி
சென்னை: புதுசா வந்தவன் எல்லாம் பேசுறான் என்றால் அவனுக்கு இந்த ஒரு பதிலை மட்டும் சொல்லுங்க.. இன்னைக்கு 200 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு வாங்குறானுங்க என்றால் அது திமுக போட்ட பிச்சை.. திமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால், இவனுங்க எல்லாம் பிளாட்பாரத்தில் பிச்சை தான் எடுத்துட்டு இருப்பானுங்க.. என்று திமுக அமைச்சர் ஆர் எஸ் பாரதி விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
பிச்சைக்காரன் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கிறவனுக்கு எல்லாம் சினிமாவில 200 கோடி ரூபாய் வருமானம் வருது என்றால் அதற்கு நாம் இங்கு காப்பாற்றி வச்சு இருக்கிற இந்த மண்ணை, சினிமா ரசிகர்களாக, தமிழ் ரசிகர்களாக மாற்றி வைத்தது தான் என்றும் அவர் கூறினார்.

ஒரே ஒரு செங்கல்லை காட்டி
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், திமுகவை வீழ்த்தி ஆட்சியில் அமர்வோம் என பேசி வருகிறார். இந்த நிலையில் விஜய்க்கு பதில் அளிக்கும் வகையில் திமுக அமைச்சர் ஆர் எஸ் பாரதி மறைமுகமாக அவரை விமர்சித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பிறகு தான் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒரே ஒரு செங்கல்லில் 39 இடங்களில் வெற்றி பெற வைத்து மொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். நம்மள திட்டுனவன், பேசுனவன் எல்லாரும் 4 இதா பிரிஞ்சி கிடக்கிறாங்க.. அப்பா ஒரு பக்கம் புள்ள ஒரு பக்கமாக நிற்குறாங்க..
புதுசா வந்தவன் எல்லாம் பேசுறான்
ஒரு கட்சி நாளா போயிருக்கு.. இப்போ புதுசா ஒரு கட்சி வந்து இருக்கு. அது ஒன்னும் பெரிய சக்தி கிடையாது.. ஒரு தட்டு தட்டினால் கீழே விழுந்துவிடும். அதை எப்போது தட்ட வேண்டும் என நமக்கு தெரியும். அந்த வித்தையை காட்ட வேண்டிய இடத்தில் காட்டினால் ஓடிப் போயிடுவான்.. ஆகவே நம்முடைய தோழர்கள் நம்முடைய இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்..
ஒன்னும் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்த இயக்கத்தை பழித்தவன், அழிக்க நினைத்தவன் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. இதனை கண் கூடாக பார்க்க போகிறீர்கள். புதுசா வந்தவன் எல்லாம் பேசுறான் என்றால் அவனுக்கு இந்த ஒரு பதிலை மட்டும் சொல்லுங்க.. இன்னைக்கு 200 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு வாங்குறானுங்க என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் போட்ட பிச்சை..
200 கோடி வாங்கியிருக்க முடியாது
எல்லாரும் பெருசு பெருசா பேசுவாங்க.. நான் இப்படி ஓப்பனாக சொல்கிறேன்.. திமுக என்ற ஒரு கட்சி இல்லையென்றால், சினிமாவில் 200 கோடி எல்லாம் வாங்கியிருக்க முடியாது.. மகாராஷ்டிராவில் என்ன ஆட்சி.. அங்கு மராத்தி மொழியில் படமே கிடையாது.. எல்லாம் இந்தி படம் தான்.. அதனால் மராட்டியத்தில் எந்த சினிமா நடிகனும் இல்லை. எல்லாரும் ஒளிந்துவிட்டனர்.
திமுக இல்லாமல் இருந்திருந்தால்
ஹிந்தி படமே ஒடாத ஒரு மாநிலம் எது என்றால் அது தமிழ்நாடு தான்.. தமிழ் மொழி இருக்கின்ற காரணத்தில் தான் தமிழில் படம் எடுத்து இவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார்கள். இந்த திமுக இல்லாமல் இருந்திருந்தால் இவன் எல்லாம் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிற ஆளு.. பிச்சைக்கார மாதிரி மூஞ்சை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் 200 கோடி ரூபாய் சினிமாவில் வருகிறது என்றால், அதற்கு நாம் இங்கு காப்பாற்றி வச்சு இருக்கிற இந்த மண்ணை, சினிமா ரசிகர்களாக, தமிழ் ரசிகர்களாக மாற்றி வைத்தது தான்..
இந்த கொடியை எப்படி பிடுங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இந்த கொடியை பிடுங்குகின்ற சக்தி இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு.. அதனை நிரூபித்து காட்டக்கூடிய வகையில் நீங்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications