நான் ஜெயிப்பதைவிட.. எடப்பாடியில் திமுக அடையும் வெற்றி முக்கியமானது... உதயநிதி தடாலடி
சென்னை: சட்டசபை தேர்தலில் தனது வெற்றியை விட எடப்பாடி தொகுதியில் திமுக வெல்வது முக்கியமானது என்று குறிப்பிட்ட உதயநிதி, சிறைக்குப் போகும் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் இன்னும் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களிலே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத் குமாருக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரம் செய்தார்.

எனது வெற்றி எளிது
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த வெற்றியைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் கொடுக்க வேண்டும். நான் போட்டியிடும் தொகுதி கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி. அதனால் நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன். அதனால்தான் நான் தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்து வருகிறேன்.

எடப்பாடி தொகுதி
ஆனால் என் வெற்றி விட எடப்பாடியில் சம்பத்குமாரின் வெற்றி மிக மிக முக்கியமானது. இன்னும் சில மாதங்களில் சிறைக்குப் போகும் பழனிசாமியை தேர்ந்தெடுத்து விடாதீர்கள். ஏப்ரல் 6-ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத்குமரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வு
திமுக ஆட்சியிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் அழுத்ததிற்குப் பயந்த அதிமுக நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் அனிதா தொடங்கி மருத்துவர் ஆக விரும்பிய பல தமிழக மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்கம்
மேலும், 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் விமர்சித்தார். மேலும் பலர் ஏடிஎம் வாசல்களில் தங்கள் பணத்தை எடுக்க முயன்று முடியாமல் போய் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications