விஜய்யை ஓரம் கட்ட திமுக எடுத்த விஸ்வரூபம்! பாஜகவை கழட்டிவிட அதிமுகவுக்கு ரகசிய மெசேஜ்? லக் + லாபம்
சென்னை: திமுக, அதிமுக பரபரப்புக்கு நடுவில் பாஜகவும் என்ட்ரி தந்துள்ளது.. தமிழக அரசியலில் எப்போதுமே இல்லாத ஒரு விசித்திரமான சூழல் தற்போது உருவாகியுள்ளது.. 50 ஆண்டுகால அரசியல் பகையை மறந்து அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தருவதாக வெளியாகியுள்ள தகவல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது.. இந்த அதிரடி திருப்பத்தால் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கடும் அதிருப்தியில் இருப்பதோடு, அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது..
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்களாகியும் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது..

234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் 118 இடங்கள் இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில், 108 இடங்களை வென்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.
47 அதிமுக சீட்
இதற்கிடையே 47 இடங்களை வைத்துள்ள அதிமுக, ஆட்சி அமைக்க முன்வந்தால் அதற்கு 59 இடங்களை வைத்துள்ள திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயார் என ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.. திராவிடக் கட்சிகளின் இந்தத் திடீர் நெருக்கம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது..
இந்நிலையில், அதிமுக - திமுக இடையிலான இந்த இணக்கமான போக்கை பாஜக தலைமை கடுமையாக எதிர்த்துள்ளது.. இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
பாஜக எடுக்க போகும் முடிவு?
இந்தக் கூட்டத்தில், "திமுகவின் ஆதரவை அதிமுக ஒருபோதும் ஏற்கக் கூடாது" என்று அதிமுக தலைமைக்கு பாஜக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.. ஒருவேளை திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால், அது தார்மீக ரீதியாகச் சரியாக இருக்காது என்றும், பாஜகவின் கொள்கைகளுக்குப் புறம்பானது என்றும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது..
மேலும், திமுகவின் ஆதரவை ஏற்று அதிமுக கைகோர்த்தால், பாஜக உடனடியாக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது..
திமுகவின் நிபந்தனையை அதிமுக ஏற்கும் பட்சத்தில் தமிழக அரசியலில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது..
குறிப்பாக, "மதவாத சக்திகளுடன் கைகோர்க்க மாட்டோம்" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமானால் பாஜகவுடனான உறவை அதிமுக துண்டிக்க வேண்டும் என்று மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சலசலக்கப்படுகிறது.
அதிமுக திமுக ஆதரவு தந்தால்?
ஒருவேளை அதிமுக இந்த நிபந்தனைக்கு இணங்கினால், அது அக்கட்சிக்கு பாஜகவின் ஆதரவை இழக்கச் செய்யும் அதே வேளையில், 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு வலுவான திராவிடக் கூட்டணியை உருவாக்கி நடிகர் விஜய்யின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..
பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது அதிமுகவுக்கு ஒரு பக்கம் தேசிய அளவிலான செல்வாக்கை குறைத்தாலும், மாநில அளவில் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க இதுவே ஒரே வழி என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது..
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
"பாஜகவை கழட்டிவிட திமுக போடும் திட்டத்தில் அதிமுக சிக்கிக் கொள்ளக் கூடாது" என்பதுதான் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்வாரா அல்லது திமுகவின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமருவாரா என்பதே இப்போதைய பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது..
இன்னொருபக்கம், ஆளுநர் அர்லேகரும் விஜய்யின் தவெகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் அனுமதி அளிக்காததால், அரசியல் களம் மிகவும் சிக்கலாகியுள்ளது..
திமுக எடுத்த விஸ்வரூபம்?
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது முடிவாகும்.
50 ஆண்டுகால அரசியல் பகையைத் தாண்டி திமுகவும் அதிமுகவும் ஒன்று சேருமா அல்லது பாஜகவின் அறிவுரைப்படி அதிமுக தனித்து முடிவெடுக்குமா என்பதை ஒட்டுமொத்த தேசமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.. அடுத்த சில மணி நேரங்களில் சென்னை கோட்டையை நோக்கிப் பாயப்போகும் அரசியல் அறிவிப்புகள் தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை..












Click it and Unblock the Notifications