சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவர்" பெயரை ஸ்டாலின் சொன்னதுமே அதிர்ந்து போன திமுகவினர்.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆன வேட்பாளர்!

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் என்பவர் போட்டியிடுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: "இவரை போய் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறீர்களே" என்று செய்தியாளர்கள் ஒரு கேள்வியை கேட்க, அதற்கு நச்சென பதிலளித்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்..!

தமிழக தேர்தல் களம் சூடாகி உள்ளது.. அதிமுக, திமுக மும்முரமாகி விட்டது.. இதில் வேட்பாளர்கள் லிஸ்ட்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

வட்டியில்லா கடன், ஆட்டோ வாங்க 10 ஆயிரம்.. திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வட்டியில்லா கடன், ஆட்டோ வாங்க 10 ஆயிரம்.. திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

நேற்று திமுக சார்பில் லிஸ்ட் வெளியானது.. அதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் யார் வேட்பாளர் என்றுதான் பெரும்பாலானோரின் எண்ணம் இருந்தது. அதற்கு காரணம், அது எடப்பாடி பழனிசாமியின் தொகுதி ஆகும்.. 4 முறை எம்எல்ஏவாக இருப்பவர்.. இப்போது மறுபடியும் போட்டியிட போகிறார்

 சாதனைகள்

சாதனைகள்

இந்த 4 வருட காலத்தில் எடப்பாடியார் செய்த சாதனைகள் அபாரம்.. திட்டங்கள் ஏராளம்.. அதனால் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி உறுதி என்பதை கண்ணைமூடிக் கொண்டு சொல்லிவிடலாம் என்பதே பலரது கணக்காக உள்ளது.. அதுமட்டுமல்ல, அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் சரி, அவர் நிச்சயம் மண்ணை கவ்வுவவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று எடப்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் யாராக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்தது..

 சம்பத்குமார்

சம்பத்குமார்

அவர் பெயர் சம்பத்குமார்.. ஆனால் இந்த பெயரை கேட்டதுமே பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை.. ஸ்டாலின் அவர் பெயரை அறிவித்ததுமே எடப்பாடி திமுகவினர் அதிருப்தி அடைந்துவிட்டனராம். ஏனெனில், எடப்பாடி பழனிசாமியை, சொந்த தொகுதியிலேயே மண்ணை கவ்வ செய்ய வேண்டும் என்றுதான் கடந்த சில நாட்களாகவே ஸ்டாலினும், கனிமொழியும் சொல்லி வருகின்றனர்.. அப்படிஇருக்கும்போது, எப்படியும் வலுவான நபர்தான் அவருக்கு போட்டியாக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

அப்செட்

அப்செட்

சம்பத்குமார் பெயரை அறிவித்ததும் சற்று அதிருப்தி திமுகவில் எழுந்துள்ளதாம்.. காரணம், இந்த இளைஞர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்... எம்பி படித்துள்ளார்.. 37 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருப்பவர்.. இருந்தாலும், மக்களிடமோ, கட்சிக்காரர்களிடமோ அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்கிறார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதாவது எடப்பாடி பழனிசாமியுடன் மோதும் அளவுக்கு எந்த வகையிலும் பலம் பொருந்தியவர் இல்லை என்கிறார்கள்.. டி.எம்.செல்வகணபதியின் பரிந்துரையால்தான் சம்பத்குமாருக்கு இந்த சீட் கிடைத்ததாக சொல்கிறார்கள்.. இருந்தாலும் வேட்பாளர் தேர்வில் திமுக தலைமை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமே என்ற முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன.

 சுகவீனம்

சுகவீனம்

ஆனால், இன்னொரு பக்கம் சம்பத்குமாருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.. யாரையுமே எந்த கண்ணோட்டத்துடனும் பார்த்துவிடக்கூடாது.. ஒருவேளை பர்கூரில் ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம் லிஸ்ட்டில் சம்பத்குமார் சேர்ந்தால் என்ன செய்வீர்கள்? சரியான வேட்பாளரைதான் தலைமை நிறுத்தி உள்ளது.. அவரை வெற்றி பெற வைப்பதே எங்கள் லட்சியம்... இளைஞர்களுக்கு திமுகவில் வாய்ப்பு தரவில்லை என்கிறீர்கள், வாய்ப்பு தந்தால், இப்படி குறை கண்டுபிடிக்கிறீர்களே? என்கின்றனர் உடன்பிறப்புகள்!

 வெற்றி வேட்பாளர்

வெற்றி வேட்பாளர்

அதுமட்டுமல்ல, நேற்று வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு முடிந்ததும், ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், "முதல்வர் எடப்படி பழனிசாமியை எதிர்த்து இப்படி சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?" என்று கேட்டனர்.. அதற்கு ஸ்டாலின் "அவர் சாதாரண வேட்பாளராக இருக்கலாம்... ஆனால் வெற்றி வேட்பாளர்" என்றார். ஸ்டாலின் இப்படி சொன்னதுமே சேலம் திமுக குஷியாகிவிட்டது.. சம்பத்குமாரை வெற்றி பெற வைத்தே தீருவது என்ற களப்பணியில் அதிரடியாக இறங்கிவிட்டது!

English summary
DMK Sampath Kumar opposes Edapadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X