திமுகவில் மாநகர செயலாளர் என்ற பதவியே இனி கிடையாது.. ஸ்டாலின் எடுத்த மேஜர் முடிவு!
சென்னை: திமுகவில் மாநகர செயலாளர் என்ற பதவியே இனி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10,000 வாக்காளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர், 40,000 வாக்காளர்களுக்கு ஒரு பகுதிச் செயலாளர் நியமிக்கப்படுவார். பிற மாநகரங்களில் 5,000 வாக்காளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும், கட்சியின் அமைப்பு ரீதியாக தற்போதுள்ள மாவட்டங்களை பிரிக்கவும் திமுக, திட்டமிட்ட. திமுகவில், தற்போது, 77 மாவட்ட செயலர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, ஒரு மாவட்டம் என பிரித்து மாவட்ட செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் வாயிலாக, மாவட்ட செயலாளர் பதவியில், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கட்சியில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
திமுக செயற்குழுக் கூட்டம், சென்னையில், கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை, 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு உட்பட 9 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளை செயலாளர்களுக்கு - 45 வயது, வட்டச் செயலாளர்களுக்கு- 50 வயது, ஒன்றிய செயலாளர்களுக்கு- 60 வயது, மாவட்ட செயலாளர்களுக்கு- 70 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறுப்பில் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், திமுகவில் மாநகர செயலாளர் என்ற பதவியே இனி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10,000 வாக்காளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர், 40,000 வாக்காளர்களுக்கு ஒரு பகுதிச் செயலாளர் நியமிக்கப்படுவார். பிற மாநகரங்களில் 5,000 வாக்காளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
