49% ஆண்கள்.. 47% பெண்கள்.. 'எகிறும்' திமுக ஆதரவு - 'இந்தியா டுடே' கருத்துக்கணிப்பு
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், ஒவ்வொரு கட்சிக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரின் வாக்குகள் சதவிகிதம் குறித்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும்.
திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என்று ஐந்து முனைத் தேர்தல் களத்தை தமிழக சட்டசபைத் தேர்தல் சந்திக்கிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திமுக ஆட்சி
இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்துள்ளதால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேஷ்னல் முதல் லோக்கல் வரை பெரும்பாலான ஊடகங்கள் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில், திமுக வெற்றிப் பெற்று ஆட்சியமைக்கும் என்று அனைத்து தரப்பு கருத்துக்கணிப்புகளும் ஒருசேர முடிவுகள் வெளியிட, திமுக தலைமை மகிழ்ச்சியில் உள்ளது.

கணிசமான இடங்கள்
அதுமட்டுமின்றி, அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்திலும் திமுக 35 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்று கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளிவர ஸ்டாலினே ஆச்சர்யத்தில் உள்ளாராம். அதேபோல், தென் மண்டலத்திலும், திமுக கணிசமான இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எந்த கட்சி டாப்?
இந்த நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆண், பெண் என்று இருபாலரின் வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளன. இதில், திமுக கூட்டணிக்கு 49 சதவிகித ஆண்களும், 47 சதவிகித பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், அதிமுக கூட்டணிக்கு 32 சதவிகித ஆண்களும், 38 சதவிகித பெண்களும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

அமமுக நிலைமை?
அதுமட்டுமின்றி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு 4 சதவிகித ஆண்களும், 2 சதவிகித பெண்களும் சப்போர்ட் கொடுக்க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 4 சதவிகித ஆண்களும், 4 சதவிகித பெண்களும் என சரிசமமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ('மய்யம்'-ங்கிறதால அப்படியும் இல்லாம, இப்படியும் இல்லாம சரிசமமா 4 % கொடுத்திருக்கங்களோ)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications